அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை வலையமைப்பில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கான விசேட புலமைப்பரிசில் வேலைத்திட்டம்

24-August-2026

அபிவிருத்தி லொத்தர் சபையின் எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் லொத்தர் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஜனாதிபதி நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புலமைப்பரிசில் வேலைத்திட்டத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு 2026.08.23 அன்று வடமத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, அங்கு வடமத்திய மாகாண லொத்தர் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்த வேலைத்திட்டம் அனுராதபுர மாகாண சபை கேட்போர் கூடத்தில், ஜனாதிபதி நிதியத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகருமான வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சட்டத்தரணி ஹேமந்த ஸ்வர்ணதிலக உட்பட சிறப்பு அதிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

எமது விற்பனை முகவர் வலையமைப்பில் உள்ள பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி நிறைவடையும் வரை வழங்கப்படவுள்ள இந்தப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இதனை மேலும் வெற்றிகரமாக்க இன்றைப் போலவே எதிர்காலத்திலும் உங்களின் ஆதரவை நாம் எதிர்பார்க்கின்றோம்.



04-September-2026

...

17-August-2026

...

சிறப்புச் செய்தி