வாரந்தம் சகல செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதி இடம்பெறுவதுடன் அதில் வெற்றிவாய்ப்பினைப் பெறாத சுப்பிரி ஜயமல்லத் தொகையை 2019 ஆகஸ்ட் மாதம் 02 ஆந் திகதி வெற்றிகாக இலுக்கப்படும் அபிவிருத்தி அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டு சுப்பிரி ஜயமல்லவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
இறுதியாக 2019 ஆகஸ்ட் மாதம் 02 ஆந் திகதிய வெற்றிக்காக சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டின் வெற்றியை, அதன் இறுதி சீட்டிலுப்புத் திகதி முதல் 06 மாதங்களினுள் பெற்றுக் கொள்வதற்கு வெற்றியாளர்களுக்கு இயலுமை காணப்படுகின்றது.
அதற்கிணங்க இதற்குப் பிறகு நியத ஜய லொத்தர் சீட்டு பாவனையில் இருந்த தினங்களுக்குப் பதிலாக ஜயோதா லொத்தர் சீட்டு செவ்வாய்க் கிழமையிலும் அபிவிருத்தி அதிர்ஷ்டச் சீட்டு வெள்ளிக் கிழமைகளிலும் வெற்றிவாய்ப்பிற்கான சீட்டிலுப்புக்கள் இடம்பெறும்.
இத் திருத்தங்களுக்கு ஏற்ப உமக்கு ஜயோதா லொத்தர் சீட்டினை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் அபிவிருத்தி அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டினை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
அதேபோன்று மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அதிக வரவேற்பைப் பெற்ற லக்கின அதிர்ஷ்டம் ( ராஷி அதிர்ஷ்டம்) லொத்தர் சீட்டு 2019 ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி முதல் வாரத்தின் ஏழு நாட்களிலும் சீட்டிலுப்பினை மேற்கொள்ளப்படவுமுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்பு நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் கைகோர்த்து ஒன்றிணைந்துள்ள அறிவிப்பாளர்களின் ஆற்றல்களைய...
அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட...