அபிவிருத்தி லொத்தர் சபையின் உயிர் நாடியாக விளங்கும் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கு இலவசமாக வைத்திய வசதிகளை வழங்கும் திட்டத் தொடரின் மூன்றாம் இலவச வைத்திய முகாம் கம்பஹ மாவட்டத்தில் 2019.08.14 ஆந் திகதியன்று நடாத்தப்பட்டது.
ஆண்டின் அதிகமான நாட்கள் தனது உடலியல் சார்ந்த சுகாதாரம் பற்றி எவ்வித கவனமும் இன்றி பல்வேறுபட்ட நோய்க் காரணிகளால் அல்லலுறும் லொத்தர் வியாபாரத்தில் ஈடுபடும் அதிகமான விற்பனை முகவர்கள் மற்றும் உதவியாளர்களை மட்டுமே நோக்காகக் கொண்டு இலவசப் பரிசோதனைகள் மற்றும் வைத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு மருந்துகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் 400 க்கும் மேற்பட்டோர் இந்த இலவச வைத்திய முகாமிற்கு சமூகமளித்து பயன்பெற்றதோடு இந் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அவர்களிடமிருந்து மல்டில்லாப் பாராட்டும் கிடைக்கப்பெற்றது.
இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சேன சூரியப்பெரும அவர்கள், பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன அவர்கள், பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை) ஷானக தொடங்கொட அவர்கள், உதவிப் பொது முகாமையாளர் விற்பனை சுனில் ஜயரத்ன அவர்களுடன் வலய முகாமையாளர் மலிந்த பலகல்ல அவர்கள் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக மற்றும் ஜயோதா லொத்தர்களினூடாக உருவாக்கப்பட்ட சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கு காசோலை வழங்கல் 2021.01.07ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப...