அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் அறிவிப்பாளர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வு

21-August-2019

அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்பு  நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் கைகோர்த்து ஒன்றிணைந்துள்ள அறிவிப்பாளர்களின் ஆற்றல்களையும் தேர்ச்சியையும் மென்மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியப்படும் உதவிகளை வழங்குவது இந் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிலுப்பு தொடர்பான அறிவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சகல அறிவிப்பாளர்களும் இதில் கலந்து கொள்வதற்குள்ளார்கள் என்பதோடு பதினைந்து பேர் கொண்ட இரு குழுக்களாக பிரித்து இச் செயலமர்வில் அவர்களை பங்குபற்றச் செய்யப்படுவார்கள்.

பிரபல்ய மூத்த நடிகையான திருமதி. அனோஜா வீரசிங்க அவர்களின் வழிகாட்டலுடன் பெல்லன்வில அபின யோக ஆசிரமத்தில் நடாத்தப்பட்ட இச் செயலமர்விற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 09 ஆந் திகதி முதல் 13 ஆந் திகதி வரையான ஐந்து நாள் கொண்ட காலத்தினுள் 15 பேரினைக் கொண்ட முதற் குழு கலந்து கொண்டார்கள்.   

 



அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

12-February-2020

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கெளரவ நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் ...

சிறப்புச் செய்தி