அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

மூன்று இலட்சம் மகபொல புலமைப் பரிசில் திட்டப் பயன்பெறுநர்களில் நீங்களும் ஒருவரா?

22-August-2019

உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?

அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நாம் எமக்குரிய உரிமைகள் தொடர்பாக ஆர்வம் காட்டினாலும் எமக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவர்கள் தொடர்பில் ஆர்வம் காட்டுவது மிகக் குறைந்த அளவிலாகும். அதனால் இன்றளவில் ​அநேகமாக மகபொல புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றவர்கள் தங்களுக்கு உறுதுணையாக நின்று அந்த மகபொல புலமைப் பரிசிலுக்காக தோல்கொடுப்பவர்கள் யார் என்பதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1983 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மகபொல புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் 306,637 ஆன மாணவர் தொகையினர் இந் நாட்டில் கற்கும் திறனுள்ள அறிவு சார்ந்த இளைஞர் சமூகத்துக்கு வழங்குவதோடு அரசாங்கத்துக்கும் பாரிய அளவிலான நிதித் தொகையினை வாரி வழங்குவதுடன் இன்றும் அப்பணியில்  ஈடுபட்டு வருவது வேறு யாருமில்லை உமது வாழ்வை ஒளிமயமாக்கும் “ அபிவிருத்தி லொத்தர் சபையாகும்”.

மகபொல புலமைப் பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது?

இந் நாட்டின் உயர் கல்வியினைக் கற்பதற்கு தகைமையுடன் கூடிய குறைந்த வருமானம் பெறும் பொருளாதாரக் கஷ்டங்களைக் கொண்ட பிள்ளைகளுக்கு தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பானதும் தொடர்ச்சியானதுமான நடைமுறைப்படுத்தப்படும் மகபொல புலமைப் பரிசில் எனும் அளப்பரிய பங்களிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் காலஞ்சென்ற கௌரவ அமைச்சர் லலித் எதுலத் முதலி ஆவார்.

1980 ஆம் ஆண்டில் வர்த்தக மற்றும் கடற்படை அமைச்சராக கடமையாற்றிய அவர் மகபொல எண்ணக்கருவை உருவாக்கியதோடு ஆரம்பத்தில் அதற்கான பணத்தினை  மகபொல வர்த்தக கண்காட்சிகள் மற்றும் மகபொல லொத்தர் சீட்டு விற்பனைகளின் மூலம் சேகரித்தார். ஆரம்ப காலங்களில் அவ் வருமானங்கள் கிராமியப் பாடசாலைகளைக் கட்டியெழுப்பும் வகையில் பயன்படுத்தப்பட்டதோடு காலப்போக்கில் அந் நிதி தேசிய மட்டத்தில் பயன்படுத்தும் நிலைமைக்கு கொண்டு வருவது அவரின் நோக்கமாகக் காணப்பட்டது. அதற்கிணங்க நிதியியல் ரீதியாக குறைந்த வருமானம் பெறும் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளை வலுவூட்டும் வகையில் புலமைப் பரிசில் திட்டமொன்றினை உருவாக்க அம் மா மனிதர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூரநோக்கமும் மனிதநேயமுள்ளவருமாக விளங்கும் லலித் எதுலத்முதலி அவர்களின் நயநேர்த்தி மிக்க மனிதாபிமானத்தின் பிரதிவிளைவாக மகபொல புலமைப் பரிசில் நிதியம் உருவாக்கப்பட்டதோடு அது 1981 ஆம் ஆண்டு 66 ஆம் இலக்க மகபொல உயர் கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் முறைசார்ந்த வகையில் நிர்வாகிக்கக் கூடிய சட்ட வரையறையொன்றுடன் கூடிய சூழலில் உருவாக்கப்பட்டது. 

அது வரை சந்தைகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளைப் போன்றே மகபொல லொத்தர் சீட்டு விற்பனையினாலும் அந்நிதியைத் திரட்டிக் கொண்டாலும் 1983 ஆம் ஆண்டு சனாதிபதி நிதியத்தினாலும் மகபொல நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினாலும் 2.2 மில்லியன் ரூபா அளவில் முதலீடு  செய்யப்பட்டதோடு,  அபிவிருத்தி லொத்தர் சபையின் துவக்கத்துடன் மகபொல புலமைப் பரிசில் நிதிக்கு  நிதியியல் ரீதியிலான அடிப்படைக்கான நீண்ட காலத்துக்கு நம்பிக்கையுடன் கூடிய நிலைத்திருப்புத் தன்மையை உரித்தாக்கியும்  கொண்டது.

அபிவிருத்தி லொத்தர் சபையை நிறுவுவதற்காக சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியியல் ரீதியான அத்திவாரம் காரணமாக அதன் பங்கிலாபங்கள் நேரடியாக சனாதிபதி நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வது அபிவிருத்தி லொத்தர் சபையின் சட்டரீதியான பணியாகும். அந் நிதியத்திலிருந்து 50 வீத்தினை மகபொல நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் வரவு வைக்கப்படுவது சனாதிபதி நிதியத்தின் ஊடாக இடம்பெறுகின்றது.

அதற்கிணங்க 1981 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை சனாதிபதி நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் 2588 கோடி ரூபாய்  பெறுமதியான தொகை வழங்கப்பட்டுள்ளது.

அத் தொகையில் 50மூ இனை மகபொல நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துக்கு வழங்கும் நிகழ்வானது சனாதிபதி நிதியத்தின் ஊடாக இடம்பெறுகின்றது. மகபொல புலமைப் பரிசில் நிதியத்துக்கு நிதியியல் ரீதியாக பங்களிப்புச் செய்யும் அரசின் ஒரே நிறுவனமாக அபிவிருத்தி லொத்தர் சபை விளங்குகின்றது.

 

மகபொல புலமைப்பரிசில் வரப்பிரசாதத்தினைப் பெறுவோர் யாவர்?

மகபொல புலமைப் பரிசில் என்றவுடன் எமக்கு ஞாபகத்தில் வருவது பல்கலைக்கழக மாணவர்கள் என்பதுடன் அநேகமானவர்களின் கருத்தாகக் காணப்படுவது மகபொல புலமைப்பரிசில் உரித்துடையாவது பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் என்பதாகும்.

என்றாலும் இந் நாட்டு பல்கலைக்கழக அமைப்பினுள் உள்ளடக்கப்படும் சகல பல்கலைக்கழங்கள் மற்றும் மண்டபங்கள் தவிர்ந்த ஏனைய உயர் கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களுள் அதிகமானவற்றில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்காகவும் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பாடசாலை, சிறீ பாலி மண்டபம், பேராதெனிய பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியா மண்டபம், ருஹுணு பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை மண்டபம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம்,  வயம்ப பல்கலைக்கழகம், தேசிய மருத்துவ பீடம், கம்பஹ விக்கிரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ நிறுவனம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கலை பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழங்களினுள் கல்வி கற்கும் உமக்கும், கல்வி கற்று நிறைவு செய்த உங்களுக்கும் மகபொல புலமைப் பரிசில் நிதியத்துக்கு பங்களிப்பு வழங்கியது அபிவிருத்தி லொத்தர் சபையாகும்.  

மகபொல புலமைப்பரிசில் வழங்கப்படும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்கள் யாவை?

இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம்

இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகம்

சட்டக் கல்லுரி

தொழில்நுட்ப நிறுவனம் (NDT)

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

இலங்கை உயர்  தொழில்நுட்ப கல்வி நிலையம்

மேற்படி உயர் கல்வி நிலையங்களின் கீழ் கல்வி கற்ற உமக்கும், கல்வி கற்றுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் மாதாந்தம் பெற்றுக் கொள்ளும் மகபொல புலமைப்பரிசிலுக்கு நிதிப் பங்களிப்பு வழங்குவது அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலமாகும்.

போட்டித் தன்மை கொண்ட பூமியில் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அப் பூமியில் உறுதியாக கால் பதித்து வாழ்வதற்கு எமக்கிருக்கும் ஒரே பலம் கல்வி என்றபடியால் அதனை இடைநடுவே நிறுத்தி வாழ்வை சீரழித்துக் கொள்ளாமல் கல்வியின் உச்சத்திற்கே செல்வதற்கு ஆசிர்வாதமாக அமையும் மகபொல புலமைப் பரிசில் நிதியத்துக்கு தனது அதிகபட்ச பங்களிப்பினை வழங்கும் அபிவிருத்தி லொத்தர் சபையானது உம்மைப் போன்ற மனிதர்கள் கொள்வனவு செய்யும் லொத்தர் சீட்டினால் கிடைக்கப்பெறும் இருபது ரூபாயினாலாகும்.  

இந் நிதியத்தினால் கல்வி கற்ற நீர் இன்று சமூகத்தில் செல்வச் செழிப்புடன் ஆடம்பரமாக வாழும் ஒரு தனவந்தராக இருக்க முடியும். லொத்தர் கூடமொன்றினை அல்லது லொத்தர் பலகையொன்றினை கையில் ஏந்திய லொத்தர் சீட்டு விற்பனை உதவியாளர் ஒருவரை நீர் கண்டிருக்க மாட்டீர். அவ்வாறில்லாதுவிடின் நீண்ட காலம் நீர் லொத்தர் சீட்டொன்றினை கொள்வனவு செய்திருக்க மாட்டீர். என்றாலும் நீர் உமது ஆரம்பத்தை மறந்து விடமுடியாது. நீர் அப் பல்கலைக்கழங்களில் இருந்து கல்வி கற்றதை உம்மால் ஒருபோதும் மறந்து விடமுடியாது.   உம்மைப் போன்றே இன்றும் இதற்குப் பின்னரும் மேலும் பல்லாயிரக் கணக்கானோர் வாழ்வில் வெற்றி வாகை சூடுவதற்கு மகபொல புலமைப் பரிசிலினால் உதவியைப் பெறுவார்கள்.

அன்று இந் நிதியத்தினால் உதவியைப் பெற்று கல்வி பயின்ற நீர் நாளை உமது பிள்ளைக்கு மகபொல புலமைப் பரிசில் நிதியத்தின் தேவை அவசியப்படுவதில்லை. என்றாலும் அநேகமானோர் இந் நாட்டில் குறை வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள சாதாரண பிள்ளைகளுக்காக மகபொல புலமைப் பரிசில் இன்றும் நாளையும் இதற்குப் பின்னரும் நிலைத்திருத்தல் வேண்டும்.  லலித் எதுலத்முதலி எனும் அந்த கருணை மிகு மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணக்கரு உயிரூட்டப்பட்டுள்ள மகபொல புலமைப் பரிசில் நிதியம் நாளுக்கு நாள் அதன் தொகையை அதிகரிக்கச்  செய்ய முடிவது உமது பங்களிப்பினால் ஆகும். உமது மனிதநேயத்தினால் கஞ்சமின்றி செலவழிக்கும் அச் சிறிய இருபது ரூபாவினால் நாளை தினத்தில் அது ஆயிரம் மடங்கு பெருக்கப்பட்டு இப் பூமியில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும்.   

நிச்சயமற்ற எதிர்காலத்தினுள் நிலையானதும் பலம் வாய்ந்ததுமான மகபொல நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் எதிர்கொள்ளும் எந்தவொரு தடையாக இருந்தாலும் உமது பிள்ளைகளுக்கு அது உந்து சக்தியாக அமைகின்றது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து அதனால் உதயமாகும் எதிர்காலத்தைக் கண்டு தெளிவான உள்ளத்துடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டொன்றினைக் கொள்வனவு செய்வதற்கு முற்படுமிடத்து அபிவிருத்தி லொத்தர் சபையும் அதற்காக அதிகபட்ச பங்களிப்பினை வழங்குகின்றது.

உமக்கு வழங்கப்பட்டதற்கான நன்றிகடனை நினைவிற் கொண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை மென்மேலும் கொள்வனவு செய்யும் போது நாளைய தினத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் ஊடாக சனாதிபதி நிதியத்துக்கு வரவிடப்படும் தொகை மென்மேலும் விருத்தியடையும். அப்போது சனாதிபதி நிதியத்தின் ஊடாக மகபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடும் வளர்ச்சியடைந்து அது மென்மேலும் வலுவானதாக அமையும்.

இது மகபொல புலமைப் பரிசிலின் வரலாறாகும். அது தொடர்பான  கடமைகளை நிறைவேற்ற வேண்டியது உமது பொறுப்பாகும்.!  



08-September-2020

...

சிறப்புச் செய்தி