அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லக்கின அதிர்ஷ்ட சுப்பிரி வெற்றியாளர்கள் இருவர் மற்றும் மேலும் பத்து இலட்சம் வெற்றிப் பரிசை வென்ற இருபத்தொரு பேருக்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

02-January-2020

அபிவிருத்தி லொத்தர் சபை, நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் மற்றும் திசெம்பர் மாதத்தின் முதல் வாரங்கள் இரண்டினுள் உருவாக்கிய வெற்றியாளர்களுக்கான காசோலைகள் வழங்கும்  நிகழ்வு 2019.12.30 ஆந் திகதியன்று அபிவிருத்தி  லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதன் போது லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டின் 2705 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா. 4,803,730 ஆன பணப் பரிசை வெற்றியீட்டிய வெலிகத்த பிரதேசத்தின் திரு. ஏ.ஆர். ஏகநாயக  அவர்களுக்குரிய காசோலையை வழங்கி வைக்கும் வைபவம் இடம்பெற்றது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் சீட்டினை விற்பனை செய்த கொள்ளுபிடிய விற்பனை முகவர் திரு. எச்.ஏ.வி. தேலிஸ் அவர்களுக்கும் காசோலையொன்றுடன் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.

 லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டின் 2706 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா. 2,000,000 ஆன பணப் பரிசை வெற்றியீட்டிய  திரு.  கே. கே. எஸ். குமார  அவர்களுக்குரிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் சீட்டினை   வெல்லம்பிடிய விற்பனை முகவர் திரு. என்.எஸ். டேன் அவர்கள் விற்பனை செய்திருந்தார்கள்.

இச் சுப்பிரி வெற்றியாளர்கள் இருவருடன் 2019 ஆம் ஆண்டினுள் லக்கின அதிர்ஷ்டத்தினால் மொத்தமாக 29 சுப்பிரி வெற்றியாளர்கள் உருவாகியுள்ளார்கள்.

அச் சுப்பிரி வெற்றியாளர்கள் இருவருடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் அத கோடிபதி, சனிக்கிழமை அதிர்ஷ்டம், சுப்பர் போல், கோடிபதி கப்ருக, ஜயோதா போன்ற லொத்தர் சீட்டுக்கள் ஊடாக உருவாகிய மேலும் பத்து இலட்சம் வென்ற வெற்றியாளர்கள் 21 பேருக்கான காசோலைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அச் சந்தர்ப்பத்திற்கு  அபிவிருத்தி லொத்தர் சபையின் பதில் கடமையாற்றும் தலைவர் திரு. திலீப் சில்வா அவர்கள், பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன,  பிரதிப்  பொது முகாமையாளர் (விற்பனை) திரு. ஷானக தொடங்கொடை அவர்கள்  உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 



04-October-2024

...

சிறப்புச் செய்தி