இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கெளரவ நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் பெற்று தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான பொது நிர்வாக துரையில் அனுபவம் பெற்றவர்.
தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பல்வேறு அமைச்சகங்களிலும் திணைக்களங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளதுடன் அரச பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
விசேடமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி அநுபவம் பெற்ற திரு.ஜகத் அவர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளார்.
அரச சேவையில் சிறந்த அநுபவம் பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் களணி பல்கலைக்கழகத்தில் நுண்கலை தொடர்பில் முதலாவது பட்டத்திணை பெற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி தொடர்பில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
புதிய தலைவர் 2020.02.10ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையில் கடமையேற்றார்.
அவர் ஏழு வயதிலே தென்னங் கீற்றில் வெற்றிலை பாக்கினை செறுகிக் கொண்டு விற்பனை செய்தவன் இன்று எந்த இடத்தில் கால் பதித்துள்ளார் என்பதனை உம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இன்று நாம் உங்களுக்கு கூறும் இந்த வாழ்க்கைச் சரிதை அபிவிருத்தி லொத்தர் சபையின் சக்தியால், தனது தலையெழுத்தை அதிர்ஷ்...
குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த விநியோகஸ்த விற்பனை முகவரான அசலா நானாயக்கார அவர்கள் தந்தையின் வழியில் லொத்தர் வியாபாரத்திற்கு வருகை தந்து அதிலே முன்னணி வகிக்கும் விற்பனை முகவராக விளங்குகின்றார்.
அபிவிருத்தி லொத்தர் சபை அவளுக்கு அளித்த வெற்றியைப் பற்றி ஞாபகமூட்டுகையில், தான் வியாபாரத்த...