அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்களை குறுந்தகவல் அல்லது USSD ஊடாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு.

03-December-2020

லொத்தர் விற்பனை துறையில் புதிய தொழில்நுட்ப அனுபவங்கள் பலவற்றினை சேர்த்த அபிவிருத்தி லொத்தர் சபை மேலும் ஓர் புதிய காலடித்தலத்தினை வைக்கும் முகமாக கொள்வனவாளர்களுக்கு கையடக்க தொலைபேசியினூடாக குறுந்தகவல்  (SMS); வாயிலாகவும் அழைப்பின (USSD) வாயிலாகவும் லொத்தர்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்குவதன் முதல் செயற்பாடு 2020.12.03 திகதி நடைபெற்றது.

டயலொக் மற்றும் மொபிடெல் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தும் கொள்வனவாளர்களுக்கு தற்போது இவ்வாறு கையடக்க தொலைபேசியினூடாக லொத்தர்களை கொள்வனவு செய்ய முடிவதுடன் எதிர்காலத்தில் ஏனைய அனைத்து தொலைபேசி இணைப்புகளினை உடைய கொள்வனவாளர்களுக்கும் இவ் வசதி வழங்கப்படவுள்ளது.

உங்களுக்கு தேவையான லொத்தர்களை குறுந்தகவல் அல்லது தொலைபேசி அழைப்பின் வாயிலாக கொள்வனவு செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

2020.12.15ம் திகதி முதல் நீங்கள் தொலைபேசி அழைப்பினூடாக (USSD) லொத்தர் கொள்வனவு செய்வதற்கு விரும்புவதாயின் #611# ஐ டயல் செய்தும்> குறுந்தகவல; (SMS) வாயிலாக லொத்தர்களை கொள்வனவு செய்ய விரும்புவதாயின் 611 இலக்கத்திற்கு குறந்தகவல் ஒன்றினை அனுப்புவதன் மூலம் விருப்பம் போல் கொள்வனவு செய்ய முடியும்.

மேற்கூறப்பட்டவாறு மிகவும் இலகுவான முறையில் அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனூடாக அபிவிருத்தி லொத்தர் சபை அரசிற்கு வழங்கும் நிதிப்பங்களிப்பினை மேலும் அதிகரித்து இந் நாட்டின் சுகாதார மற்றும் கல்வித்துறைகளை மேலும் மேம்படுத்தவும் இலங்கையில் அதிகதிகமாக கோடீஸ்வரர்கள் மற்றும் இலட்சாதிபதிகளை உருவாக்குவதும் அபிவிருத்தி லொத்தர் சபையின் எதிர்ப்பார்ப்பாகும்.



08-September-2020

...

01-August-2020

...

சிறப்புச் செய்தி