அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் கோடீஷ்வர வெற்றியாளர்கள் ஐவருக்கு பிரதமரின் கரங்களினால் காசோலைகள் வழங்கல்

15-March-2021

அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக, அபிவிருத்தி அதிர்ஷ்டம் மற்றும் சனிதா லொத்தர்களினூடாக உருவான சுப்பர் கோடீஷ்வர வெற்றியாளர்கள் ஐவருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.12ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் கேளரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் திரு.மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது "கோடிபதி கப்ருக" 689 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.75,208,420 பணத்தொகையினை வெற்றிபெற்ற வங்ச்சாவல பிரதேசத்தின் திரு.ஆர்.எம்.ஏ.பண்டார அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் பத்தேகம விற்பனை முகவர் திரு.டப்.ஜே.சீ.தினேஷ் அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது. அவ்வாறே "கோடிபதி கப்ருக" 687 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.80,903,270 பணத்தொகையினை வெற்றிபெற்ற பேராதனை பிரதேசத்தின் திரு.ஆர்.எம்.ஏ.என்.விஜேபண்டார அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டதுடன் அவ் வெற்றிக்குரிய லொத்தர் கலஹ சந்தி விற்பனை முகவர் திரு.டீ.எம்.சிறிசோம அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் "சனிதா" 3507 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.42,416,959 பணத்தொகையினை வெற்றிபெற்ற லுனுவில திருமதி.ஜீ.பீ.டீ.ஷாந்தி அவர்களுக்கும் அதன்போது காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் மாரவில விற்பனை முகவர் திரு.ரி.எம்.டி.பீ.பீரிஸ் அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது. அவ்வாறே "சனிதா" 3543 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.35,613,515 பணத்தொகையினை வெற்றிபெற்ற புஸ்ஸல்லாவ பிரதேசத்தின் திருமதி.எம்.பத்மினி அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டதுடன் அவ் வெற்றிக்குரிய லொத்தர் பிலிமதலாவ விற்பனை முகவர் திரு.கோணேஷ்வரன் அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

"அபிவிருத்தி அதிர்ஷ்டம்" 411 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.14,039,192 பணத்தொகையினை வெற்றிபெற்ற கஹவத்த திரு.எம்.ஆனந்தராஜா அவர்களுக்கும் காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் அடகலம்பன்ன விற்பனை முகவர் திரு.டி.எச்.சுனில் குணரத்ன அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.அமித கமகே அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



16-March-2022

...

சிறப்புச் செய்தி