அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் நால்வருக்கு பிரதமரின் செயலாளரின் கரங்களினால் காசோலைகள் வழங்கல்

30-March-2021

அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் போல் மற்றும் ராசி அதிர்ஷடம் ஆகிய  லொத்தர்களினூடாக உருவான சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.30ம் திகதி கேளரவ பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது "சுப்பர் போல்" 1403 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.75,412,110/- பணத்தொகையினை வெற்றிபெற்ற கெகிராவ பிரதேசத்தின் திரு.கே.ஜி.ரோஷான் அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் தம்புள்ள விற்பனை முகவர் திரு.பீ.எச்.எஸ்.ரத்னவிபூஷன அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் " ராசி அதிர்ஷடம் " 3096 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.2,454,571/- பணத்தொகையினை வெற்றிபெற்ற ஹிங்குராண திரு. ஆரியதாச அவர்களுக்கும் அதன்போது காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் ஹிங்குராண விற்பனை முகவர் திரு.கே.ஏ.எல்.ஸ்வர்னகுமார அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் " ராசி அதிர்ஷடம் " 3098 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.2,230,396/- பணத்தொகையினை வெற்றிபெற்ற கடவத திரு. எச்.பீ.குசந்த அவர்களுக்கும் அதன்போது காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர்  ரன்முதுகல  விற்பனை முகவர் திரு.பீ.ஏ.சந்திரசிறி அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் " ராசி அதிர்ஷடம் " 3089 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுப்பொதி ரூ.2,347,887/- பணத்தொகையினை வெற்றிபெ​ற்ற கண்டி திருமதி.எச்.ஜீ.பீரிஸ் அவர்களுக்கும் அதன்போது காசோலை வழங்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர்  பகமூன  விற்பனை முகவர் திருமதி.கே.யூ.ஐ.லக்மாலி அவர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.அமித கமகே அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



22-June-2022

...

22-June-2022

...

சிறப்புச் செய்தி