அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் உருவான சுப்பர் பரிசுப்பொதி வெற்றியாளர்கள் உட்பட ரூ. 25 இலட்சம், ரூ. 20 இலட்சம் மற்றும் ரூ. 10 இலட்சம் பணப்பரிசுகளை வென்ற வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கல் மற்றும் லொத்தர்களை விற்பனை செய்த விற்பனை முகவர்களுக்கு காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல் நிகழ்வு 2024.01.06ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன மற்றும் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு.சானக தொடன்கொடகே உட்பட ஏனைய முகாமையாளர்களின் பங்கேற்பில் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் நாடளாவிய ரீதியில் வெற்றியாளர்கள் 37 பேரிடையே ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய காசோலைகள் வழங்கப்பட்டது.