அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் விநியோக விற்பனை முகவர் வலையமைப்பிற்காக நடாத்தப்பட்ட விநியோக விற்பனை முகவர் சந்திப்பு 2024.11.11

13-November-2024

நான்கு தசாப்தத்திற்கு அதிகமான காலம் அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை மேம்படுத்தலுக்காக உறுதுணையாக உள்ள விநியோக விற்பனை முகவர் வலையமைப்பிற்காக நடாத்தப்பட்ட “விநியோக விற்பனை முகவர் சந்திப்பு” 2024.11.11ம் திகதி இலங்கை மன்றம் நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள விற்பனை மேம்படுத்தல் நிகழ்;ச்சி மற்றும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல், ஒவ்வொரு விநியோக விற்பனை முகவர்கள் மேற்கொண்ட விற்பனையின் முன்னேற்ற ஆராய்வு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.எம்.ஆர்.ஹேமந்த ஸ்வர்ணதிலக மற்றும் பொது முகாயைமாளர் திரு.அநுர ஜயரத்ன உட்பட முகாமைத்துவத்தினர், விற்பனை வலைப்பின்னலினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வலைய முகாமையாளர்கள் மற்றும் விற்பனை மேம்படுத்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



11-January-2022

...

04-January-2022

...

29-December-2021

...

சிறப்புச் செய்தி