அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

வெற்றிக்கு மேல் வெற்றியைத் தேடித்தரும் அபிவிருத்தி லொத்தர் சபையினால் உருவாக்கப்பட்ட மேலும் 63 அதிர்ஷ்டசாலிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு - 31/07/2026

04-August-2026

வெற்றிக்கு மேல் வெற்றியைத் தந்து உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபையினால் உருவாக்கப்பட்ட மேலும் 63 வெற்றியாளர்களுக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு 2026.07.31 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. அனுர ஜயரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்புடன் அபிவிருத்தி லொத்தர் சபை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது 'கப்றுக' லொத்தரின் சுப்பர் பரிசுப்பொதி ரூபா 10,000,000/- ஐ வென்ற வெற்றியாளருக்கும், 'ராசி அதிர்ஷ்டம்' லொத்தரின் சுப்பர் வெற்றிகளான ரூபா 4,365,108/- , ரூபா 3,683,815/-, ரூபா 3,341,224/-, ரூபா 3,284,972/-, ரூபா 3,000,000/- ஆகிய சுப்பர் பரிசுப்பொதிகளை வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கும், 'சுபிரி தன சம்பத்த'  லொத்தரில் இருபத்தைந்து இலட்சம் பரிசினை வென்ற இரு அதிர்ஷ்டசாலிகளுக்கும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், இருபது இலட்சம் வென்ற 27 வெற்றியாளர்களுக்கும், பத்து இலட்சம் வென்ற 28 வெற்றியாளர்களுக்கும் உரிய காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.



04-October-2024

...

சிறப்புச் செய்தி