அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

உமது வாழ்க்கையை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்

01-July-2019

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த விநியோகஸ்த விற்பனை முகவரான அசலா நானாயக்கார அவர்கள் தந்தையின் வழியில் லொத்தர் வியாபாரத்திற்கு வருகை தந்து அதிலே முன்னணி வகிக்கும் விற்பனை முகவராக விளங்குகின்றார். 

அபிவிருத்தி லொத்தர் சபை அவளுக்கு அளித்த வெற்றியைப் பற்றி ஞாபகமூட்டுகையில், தான் வியாபாரத்தில் கஷ்டமான தடைகளைத் தாண்டி தனக்கென்றே தனியானதும் தெளிவானதுமான பாதையை வடிவமைத்து தந்தவர் காலம்சென்ற எனது அன்புத் தந்தையே என்று கூறினாள்.  குருணாகல் மாவட்டத்தின் முதலாவது விற்பனை முகவராக விளங்கியவர் திரு. என்.வீ. அமரசேன அவர்கள் அது அவளது தந்தையாவார். கம்பில் லொத்தர் சீட்டுக்களை  அடித்து கால் நடையில் சென்று லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்வதற்கு ஆரம்பித்த எனது தந்தை லொத்தர் சீட்டுக்களை விற்று வீடு திரும்பியதன் பின்னர் தனது கால்களில் இருந்து இரத்தம் வழிந்தோடும் நிகழ்வுகளையும் தான் கண்டுள்ளதாக அவள் மேலும் தெரிவித்தார்.  

தனது தந்தைக்கு பல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளைப் புரிந்த அவள் 1987 ஆம் ஆண்டு லொத்தர் வியாபாரத்தினுள் காலடி வைக்கின்றாள். அன்று ஓர் யுவதியாக தனது தந்தையின் வியாபாரத்தில் பங்கெடுத்த அவள் வணிக உலகில் எதிர்நோக்கும் பல்வேறு இடையூறுகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து முன்னேறிச் செல்வது பெண்களுக்கு அவ்வளவு பொருத்தமற்றதாக இருந்தாலும் ஒரு சிலரின் நம்பிக்கையின் பிரகாரம் வணிக உலகத்தில் பெண்களுக்கும் வெற்றியீட்ட முடியும் என்பதனை பரைசாட்டி நின்றாள்.    

லொத்தர் துறையின் வெற்றிகரமான வர்த்தகப் பெண்மணியாக அவள் திகழ்வதற்கு வெறுமனே பெண்களுக்கே உரிய இயல்புகள் மாத்திரமல்ல ஓர் ஆணுக்குரிய இயல்புகளையும் தன்னில் வரவழைத்துக் கொண்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதால் தான் இவ்வாறானதோர் நிலைக்கு எட்டியதாக அவள் குறிப்பிடுகின்றாள்.

இன்று கூட சகல லொத்தர் கவுன்டர்களுக்கும் சென்று பரீட்சித்துப் பார்ப்பதும் இரவு பகல் என்று பாராமல் வர்த்தகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதும் அவளது அன்றாடப் பணியாகக் காணப்பட்டது. விற்பனை முகவர்களின் அல்லது உதவியாளர்களின் பிரச்சினைகளை அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்றே தீர்த்து வைப்பதாகவும் கூறி நின்றாள்.

தற்போது தான் எந்தவித குறைகளும் இன்றி வெற்றிகரமானதொரு வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் அந்த அபிமாணம் கிடைப்பதற்கு காரணம் லொத்தர் வியாபாரமே என்றும் எந்தவித  அவமானமும் இன்றி என்றும் நினைவுகூர்வதாக அவள் இறுதியாக கூறிநின்றாள்.  

அவளைப் போன்றே சுய முயற்சியாலும் தனது சிறந்த வர்த்தக ஞானத்தாலும் லொத்தர் வியாபாரத்தில் வெற்றிக் கம்பத்தினை எட்டிப்பிடித்த அபிவிருத்தி லொத்தர் சபையின் காலி மாவட்ட விநியோகஸ்த விற்பனை முகவரான திரு.வீ. சீ ஜயரத்ன அவர்களும் தற்கால லொத்தர் துறையில் இளம் தலைமுறைக்கு முன்மாதிரியானதோர் வர்த்தகப் புள்ளியாக விளங்குகின்றார்.  

1984 ஆம் ஆண்டு லொத்தர் வியாபாரத்தில் விற்பனை முகவராக இணைந்து கொண்ட ஜயரத்ன அவர்கள் குறுகிய காலத்தில் மேற்கொண்ட மகத்தான  விற்பனை வளர்ச்சியுடன் 1991 ஆம் ஆண்டின் போது காலி மாவட்ட விநியோகஸ்த விற்பனை முகவராக மாறினார். 

இன்று மாபெரும் வர்த்தகங்கள் சிலவற்றின் உரிமையாளராக விளங்கும் அவர், அவரின் அதிர்ஷ்டத்தின் பிறப்பிடமாக அமையப்பெற்றது லொத்தர் வியாபாரமாகும். தாழ்மையாக பேசத் துவங்கிய ஜயரத்ன அவர்கள் தன்னிடமுள்ள வணிக ஞானமும் என்னுள் அவர் குறித்த தெளிவான நோக்கம் என் உள்ளத்தை கவர்ந்தீர்த்தது. தற்போது லொத்தர் வியாபாரத்தின் புதிய திசைகளை நோக்கிச் செல்வதற்கும் நாளைய தினத்தில் இவ் வியாபாரத்துடன் இணைவதற்கு எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கும் பெறுமதியான ஆலோசனைகள் அவரின் உரையாடலின் போது வெளிப்பட்டது.

அவர் எழுப்பிய முக்கிய வர்த்தக விதிமுறை நிதியியல் ஒழுக்கமாகும்.  அதற்காக மேற்கொள்ள வேண்டிய முக்கிய காரணி முதலீடு என அவர் சுட்டிக் காட்டினார். அது எமது வளர்ச்சிக்கு ஏணியாக அமைவது போன்றே எதிர்பாராமல் ஏற்படும் வீழ்ச்சியின் போது மீள எழுந்து நிற்பதற்குரிய பலத்தினை தருவதாகவும் குறிப்பிட்டார். லொத்தரினால் ஆரம்பித்த தனது வர்த்தகப் பயணத்தில் மேலும் பல வியாபாரங்களுக்கு உரிமையாளராக மாற்றியதும் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவில் அநேகமான இழப்புக்களுக்கு முகங்கொடுத்த எனக்கு மீளவும் எழுவதற்கான சக்தியினை வழங்கியது சிறந்த முதலீட்டாளர்கள் என்பதனை  நன்றியுணர்வுடன் அவர் தெரிவித்தார். வருமானத்துக்கும் செலவிற்குமிடையில் பேணிச் செல்லப்பட்ட அவ்வாறான நிதியியல் ஒழுக்கம் என்பதனை அவரின் வாழ்க்கையின் வெற்றிக்கான இரகசியம் என்பதனை உறுதியாக கூறி நின்றார்.  

லொத்தர் வியாபாரத்துடன் தொடர்புபட்டமை எனது வாழ்க்கையின் திருப்பு முனையாகும் என்பதனை காட்டித் தந்த ஜயரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், ஒரு குறுகிய வட்டத்தினுள் சுருங்கி ஒரே தொழிலில் தங்கியிருப்பதனால் அதனால் கிடைக்கப்பெறுவது ஒரே வழியில் அமைந்த வருமானம் மாத்திரமே என்பதனை எமக்கு விளக்கினார்.

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் உலகத்தில் புதிய வர்த்தக முறைமைகளை கண்டறிந்து இற்றையாகும் திறமைகள் காணப்படுமாயின் லொத்தர் வியாபாரத்திலும் அது மேலதிக ஆசிர்வாதமாக அமையும் என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு அன்று போல் இன்றும் சக்தியாக அமையும் இச் சொத்துக்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் ஒருபோதும் மாறா அன்பினை வென்ற இருவராகக் இவர்கள் காணப்படுவதோடு அவர்களின் இலட்சியவாதங்கள் பற்றி எமக்கு கூறி நிற்பதும் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்திருந்தால், ஆச்சரியம் என்னவெனில்  உங்களுக்கும் வாழ்வை வெல்ல முடியும் என்பதாகும். 



04-January-2022

...

29-December-2021

...

09-December-2021

...

சிறப்புச் செய்தி