அபிவிருத்தி லொத்தர் சபையின் DLB யின் பராமரிப்பு என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் ஐந்தாம் வைத்திய முகாம் கண்டி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆந் திகதியன்று நடாத்தப்பட்டது.
இவ் வைத்திய முகாமில் இரத்த பரிோதனை மற்றும் அதூடாக இனங்காணப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்குதல், கண் பரிோதனைகள் மற்றும் குறைபாடு உடையவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல் மற்றும் ஏனைய நோய்கள் பரீட்சிக்கப்பட்டு வைத்திய ஆலோசனைகளுடன் மருந்துகளும் வழங்கி வைக்கும் நடவடிக்கை அங்கு இடம்பெற்றது.
இவ் வைத்திய முகாமிற்கு கண்டி மாவட்டத்தின் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அத்தோடு இவ்வாறான சமூகப் பணியினை மேற்கொள்வது தொடர்பாக அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக பாராட்டுக்களும் நன்றிகளும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு குவிந்த வண்ணமிருக்கின்றது.
இவ் வைத்திய முகாமிற்கு அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்கள், பிரதிப் பொது முகாமையாளர் ( நிதி) செல்வி. விஜிதா சோமரத்ன அவர்கள், பிரதிப் பொது முகாமையாளர் ( விற்பனை) திரு. ஷானக தொடங் கொட அவர்கள் மற்றும் கண்டி மாவட்டத்தின் வலய முகாமையாளர் சுனில் ரத்நாயக அவர்கள் உள்ளிட்ட பணியாட்தொகுதியினர்கள் அந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.
கொரோனா காலகட்டத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஜுன் மாதத்தினை அதிர்ஷ்டத்தின் மாதமாக மாற்றி சுப்பர் வெற்றியாளர்கள் ஆறு பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு இயன்றுள்ளது.
தேவையான நேரத்தில் தமது வாடிக்கையாளர்களை வெற்றியாளர்களாக மாற்றி ஜுன் மாதம் 11ம் திகதியிலிருந்து தொடர்ச...
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஜுன் மாதம் 01ம் திகதி முதல் ஆரம்பிக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய அபிவிருத்தி லொத்தர் சபையின் அனைத்து ரக லொத்தர்களையும் அன்றைய தினம் கொள்வனவு ...