அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் “ DLB யின் பராமரிப்பு” வைத்திய முகாம் தொடரின் ஐந்தாம் முகாம் கண்டியில்

17-September-2019

அபிவிருத்தி  லொத்தர் சபையின் DLB யின் பராமரிப்பு என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் ஐந்தாம் வைத்திய முகாம் கண்டி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர்  13 ஆந் திகதியன்று நடாத்தப்பட்டது.

இவ் வைத்திய முகாமில் இரத்த பரிோதனை மற்றும் அதூடாக இனங்காணப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்குதல், கண் பரிோதனைகள் மற்றும் குறைபாடு உடையவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல் மற்றும்  ஏனைய நோய்கள் பரீட்சிக்கப்பட்டு வைத்திய ஆலோசனைகளுடன்  மருந்துகளும் வழங்கி வைக்கும் நடவடிக்கை அங்கு இடம்பெற்றது.

இவ் வைத்திய முகாமிற்கு கண்டி மாவட்டத்தின் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அத்தோடு இவ்வாறான சமூகப் பணியினை  மேற்கொள்வது  தொடர்பாக அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக பாராட்டுக்களும் நன்றிகளும் அபிவிருத்தி  லொத்தர் சபைக்கு குவிந்த வண்ணமிருக்கின்றது.

இவ் வைத்திய முகாமிற்கு அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்கள், பிரதிப் பொது முகாமையாளர் ( நிதி)  செல்வி. விஜிதா சோமரத்ன அவர்கள், பிரதிப் பொது முகாமையாளர் ( விற்பனை) திரு. ஷானக தொடங் கொட அவர்கள் மற்றும் கண்டி மாவட்டத்தின் வலய முகாமையாளர் சுனில் ரத்நாயக அவர்கள் உள்ளிட்ட பணியாட்தொகுதியினர்கள் அந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.



லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

02-August-2019

லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

வாரந்தம் சகல செவ்வாய் மற்றும்  வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...

லக்கின அதிர்ஷ்டம் தற்போது வாரத்தின் ஏழு நாட்களிலும்

02-August-2019

லக்கின அதிர்ஷ்டம் தற்போது வாரத்தின் ஏழு நாட்களிலும்

ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி முதல் ”லக்கின அதிர்ஷ்டம்” வாரத்தின் ஏழு நாட்களிலும் உங்களின் கைகளுக்கு கொண்டு வருவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை நீங்கள் கொள்வனவு செய்த லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டு எவ்வித மாற்றங்களும் இன்றி காணப்படுவதோடு சனிக்கிழமை வெளிவர...

சிறப்புச் செய்தி