அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அறிவிப்பாளர் திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் குழுவினருக்கும்

26-September-2019

அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்புப் பிரிவில்
கடமையாற்றும் அறிவிப்பாளர்களுக்கு ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சிப்
பட்டறையொன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக
கடந்த வாரத்தில் நிறைவு செய்துள்ளார்கள்.
சகல அறிவிப்பாளர்களையும் பங்குபற்றச் செய்து இரு குழுக்களாகப் பிரித்து
நடாத்தப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறையில் பதினைந்து (15) பேரினைக்
கொண்ட இரண்டாம் குழுவினரை பங்குபெறச் செய்து செப்டம்பர் மாதம் 13
ஆந் திகதி முதல் 17 ஆந் திகதி வரை நடைபெற்றது.
முதல் குழுவினருக்கான நிகழ்ச்சித் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம்
நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரபல்ய மூத்த நடிகையான திருமதி. அனோஜா வீரசிங்க அவர்களின்
வழிகாட்டலுடன் பெல்லன்வில அபின யோக ஆசிரமத்தில் இந்த பயிற்சிப்
பட்டறை நடைபெற்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்து செயலாற்றும் சகல
அறிவிப்பாளர்களினதும் அறிவிப்புத் திறன் மற்றும் ஆற்றலை
மேம்படுத்துவதற்கு உதவியாக அமைகின்றது என்பது இந் நிகழ்ச்சித்
திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி