அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

உமது வாழ்வை வென்றெடுக்கும் எமது முன்னோடிகள் ..

05-December-2019

உமது வாழ்வை  வெற்றியடையச்  செய்யும் எமது  முன்னோடிகள்.....

வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர்   சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரம் என்பதாகும்.  ஆனால் உண்மையாகவே அபிவிருத்தி  லொத்தர் சீட்டினை விற்பதன் மூலம் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொண்டுள்ள பெரும்பாலானோர் இன்றும் அபிவிருத்தி  லொத்தர் சபையுடன் கைகோர்த்து நிற்கின்றார்கள்.

இது அவ்வாறான இலட்சியமிக்க கதாபாத்திரங்கள் இரண்டாகும்.

பானந்துரைப் பிரதேசத்தின் விநியோகஸ்த விற்பனை முகவரான திரு. லலித் பிரனாந்து அவர்கள் அபிவிருத்தி  லொத்தர் சபை குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில் அபிவிருத்தி  லொத்தர் சபை இவ்வாறு தன்னைத் தேடி வந்து வழங்கிய கெளரவத்திற்காக நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அபிவிருத்தி  லொத்தர் சபை எனது வாழ்வின் திருப்பு முனையாகும்.

அரச நிறுவனமொன்றில் சேவையாற்றிக்  கொண்டிருந்து பின்னர் அதிலிருந்து தனது சுய விருப்பத்தின் பேரில் விட்டு விலகிய லலித் பிரனாந்து அவர்கள் தனது எதிர்கால வாழ்வாதாரமாக லொத்தர் வியாபாரத்தை தேர்ந்தெடுத்துக்  கொண்டார். அது எனக்கு சவாலாக அமைந்திருந்தும் லொத்தர் வியாபாரம் எனது வாழ்வுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்த திருப்பு முனையாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

பரந்த விற்பனை வலையமைப்பு

எனக்குக் கீழ் 48 விற்பனை முகவர்கள், 112 உதவியாளர்கள் அதேபோன்று 34 ஊழியர்களுடன் எனது அலுவலகத்தில் 08 ஊழியர்களும் சேவையாற்றுகின்றார்கள். அவ்வாறான  பெருந் தொகையினரின் வாழ்க்கைக்கு  பக்க பலமாக இருப்பதற்கு அபிவிருத்தி  லொத்தர் சபையின் ஊடாக என்னால் முடியுமாக  இருப்பதனை பாக்கியமாக கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி  லொத்தர் சபை  கெளரவத்துக்கு பாத்திரமானது.

மக்களது வாழ்வுக்கு கொண்டு சேர்க்கும் அதிர்ஷ்டத்தைப் போன்றே சனாதிபதி நிதியத்துக்கும் பங்களிப்புச் செய்யும் பணியின் காரணமாக அபிவிருத்தி  லொத்தர் சபை என்பது கெளரவத்துக்குரிய நிறுவனம் என்பதோடு அதன் பங்காளர்களாக மாறக் கிடைத்தது பாரிய மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது என்று அறிவித்தார்.

நம்பிக்கையும் தெளிவும் லொத்தர் வியாபாரத்தின் அடிப்படையாகும்.

லொத்தர் வியாபாரத்துடன் இணைபவர்களுக்கு அதன் வெற்றிக் கம்பத்தை அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும்  அதற்காக அவசியப்படுவது இவ் வியாபாரத்தின் நான்கு கோணங்களையும் கண்டறிந்து அதன் மூலம் பெறப்படும்  அறிவை லொத்தர் வியாபாரத்துடன் தொடர்புடைய தரப்பினர்களுடன் பேணிச் செல்ல வேண்டிய நம்பகத்தன்மை ஆகிய இரு காரணங்களிலும் தங்கியுள்ளது என அவர்  வெளிப்படுத்தினார்.

விற்பனை முகவர்களுடன் கிட்டிய உறவினைப் பேணி வருகின்றேன்.

விற்பனை முகவர்களுடன் நம்பிக்கையுடனும் நட்புறவுடனும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, தனது வியாபாரக் கலை என எடுத்துக் காட்டிய பிரனாந்து அவர்கள், கருத்துத்  தெரிவிக்கையில் பானதுரை நகரத்தின்  வெளிப் பிரதேசங்களில் இருந்து கூட விற்பனை முகவர்கள் தன்னைத் தேடி வருகின்றார்கள் என்பதாகும்.   அவர்களுக்கு ஏற்படும் அனர்த்தங்களின் போது, பணத் தேவைகளின் போது நான் அவர்களுக்கு உதவி புரிவதாகவும், ஒரு சில  அசெளகரிமான சந்தர்ப்பங்களின் போது குறித்த விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் வகையில் லொத்தர் சீட்டுக்களை அவர்களிடம்   கொண்டு சென்று சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இளம் தலைமுறைக்கு ஓர் அளப்பரிய வாய்ப்பாகும்.

தொழிலற்ற ஆனால் சுயமாக தொழில் ஒன்றினை  மேற்கொண்டு முன்னேறுவதற்கு எதிர்பார்க்கும் ஒருவருக்கு லொத்தர் சீட்டு வியாபாரம் சிறந்த வாய்ப்பாக அமையும் என எடுத்துக் காட்டிய லலித் பிரனாந்து அவர்கள் தனது பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சிறந்த வழியாக இருந்தது என சமூகத்துக்கு லொத்தர் வியாபாரத்தை  சிபாரிசு செய்கின்றார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் பயணம் உன்னதமானது.

சனாதிபதி நிதியத்துக்கும், மகபொல புலமைப் பரிசில் நிதியத்துக்கும் பங்களிப்புச் செய்து இந் நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கிய அபிவிருத்தி  லொத்தர் சபையின் பயணம் அதி உன்னதமானது எனவும், அதன் பங்காளர்களாகவும் பெருமையுடனும் எதிர்காலத்தில் தொடர்ந்திருப்பதாகவும் பிரனாந்து  அவர்கள் நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொண்டார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகமான விற்பனைகளை மேற்கொள்ளும் விற்பனை முகவர்களில் இரண்டாம் இடத்தை வகிக்கும் அநுராதபுரத்தைச் சேர்ந்த விற்பனை முகவரான திரு. கே. ஜீ. விக்கிரமசிங்க அவர்கள் அன்று தொடக்கம் இன்று வரையான பயணத்தின் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து  கொண்டார்.

தற்போது அபிவிருத்தி லொத்தர் சபையுடன்  கைகோர்த்து  25 வருடங்களாக இணைந்திருக்கிறேன்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவராக 25 வருடங்களுக்கு முன்னர் இணைந்த திரு. விக்கிரமசிங்க அவர்கள் அநுராதபுரம் போன்ற குறைந்த சனத்தொகையுள்ள மாவட்டத்தினுள் லொத்தர் வியாபாரத்தை ஏற்று நடாத்திச் செல்வது சவாலாக அமைந்தாலும் அவர் அச் சவாலை முறியடித்து இன்று வெற்றியின் எல்லைக்கே  சென்றுள்ளார்.

இலங்கையின் அதிகூடிய விற்பனைகளை மேற்கொள்ளும் விற்பனை முகவர்களில் இரண்டாம் இடத்தை வகிக்கின்றார்.

குறைந்த சனத்தைாகையைக் கொண்ட அநுராதபுர நகரத்தில் விற்பனையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வாரச் சந்தைகளுக்குச் சென்று லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வாடிக்கையாளர்களின் விசுவாசத்தினை கட்டியெழுப்பிய  திரு. விக்கிரமசிங்க அவர்கள் அதற்காக பல்வேறு உத்திகளையும் பின்பற்றி வந்துள்ளார். வெற்றிக்கான பரிசுத் தொகையை அச்சந்தர்ப்பத்திலே வெற்றியாளருக்கு வழங்குதல், அதனை விளம்பரப் படுத்துதல், புதிய விற்பனை உதவியாளர்களை இணைத்துக் கொள்ளல், அநுராதபுர நகரம்  முழுவதும்  புதிய விற்பனைக் கூடங்களை நிறுவுதல் போன்றன அவற்றில் சிலதாகும்.

லொத்தர் சீட்டு வியாபாரம் எனது குடும்பத் தொழிலாகும்.

அபிவிருத்தி  லொத்தர் சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இவ் வியாபார நடவடிக்கைகளுக்கு தனது வாழ்க்கைத் துணைவி, மூன்று மகள்மாரினதும் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் நடாத்திச் செல்லப்படுவதாகவும், அதேபோன்று அது தற்போது குடும்பத் தொழிலாக மாறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

முயற்சியாளர்களுக்குப் பொருத்தமான வியாபாரம் 

தங்களது  முயற்சியின் அளவுக்கு  ஏற்ப வெற்றியின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது எனவும் சுய முயற்சியால் எழுந்து நிற்பவர்களுக்கு லொத்தர் சீட்டு வியாபாரத்தினைப் போன்று வேறேதும்  பொருத்தமான வியாபாரமாக காணப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருபோதும் வேலை நிறுத்தம் செய்ததில்லை

திரு. விக்கிரமசிங்க அவர்கள் அபிவிருத்தி  லொத்தர் சபையை தான் மிகவும் கௌரவப்படுத்துவதாகவும் ஒருபோதும் சபைக்கு எதிரதாக வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் அவர் பெருமையுடன் கூறி நின்றார்.  லொத்தர் சபை வீழ்ச்சியடைந்தால் நாமும் பாதாளத்தில் விழுவோம் என்ற தர்க்க ரீதியான காரணங்களின் தொடர்பை அறிந்துள்ள அவர் அபிவிருத்தி  லொத்தர் சபைக்கு தனது அதிகபட்ச நன்றியைத் தெரிவித்து தனது கலந்துரையாடலை நிறைவு செய்தார்.

அபிவிருத்தி  லொத்தர் சபைக்காக அதிகமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு எமக்கு பக்க பலமாக அமையும் இவர்கள் இருவருக்கும் இன்றும் நாளையும் என்றைக்கும் அபிவிருத்தி  லொத்தர் சபையின் அன்புக்கும் கெளரவத்துக்கும் பாத்திரமனாவர்கள் என்று கூற முடியும்.

 

அஷலா பியரத்ன



02-January-2025

...

26-December-2024

...

10-December-2024

...

சிறப்புச் செய்தி