அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்புப் பிரிவில்
கடமையாற்றும் அறிவிப்பாளர்களுக்கு ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சிப்
பட்டறையொன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக
கடந்த வாரத்தில் நிறைவு செய்துள்ளார்கள்.
சகல அறிவிப்பாளர்களையும் பங்குபற்றச் செய்து இரு குழுக்களாகப் பிரித்து
நடாத்தப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறையில் பதினைந்து (15) பேரினைக்
கொண்ட இரண்டாம் குழுவினரை பங்குபெறச் செய்து செப்டம்பர் மாதம் 13
ஆந் திகதி முதல் 17 ஆந் திகதி வரை நடைபெற்றது.
முதல் குழுவினருக்கான நிகழ்ச்சித் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம்
நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரபல்ய மூத்த நடிகையான திருமதி. அனோஜா வீரசிங்க அவர்களின்
வழிகாட்டலுடன் பெல்லன்வில அபின யோக ஆசிரமத்தில் இந்த பயிற்சிப்
பட்டறை நடைபெற்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்து செயலாற்றும் சகல
அறிவிப்பாளர்களினதும் அறிவிப்புத் திறன் மற்றும் ஆற்றலை
மேம்படுத்துவதற்கு உதவியாக அமைகின்றது என்பது இந் நிகழ்ச்சித்
திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...