அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லொத்தர் சீட்டு வரலாற்றில் அதிகூடிய ஜயமல்லவான 14.5 கோடியை வெற்றியீட்டியுள்ளார்கள்.

31-October-2019

அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை லொத்தர் சீட்டு வரலாற்றில் அதிகூடிய சுப்பிரி ஜயமல்லவுக்குப் அடுத்தபடியாக வெற்றியாளரை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டினால் முடிந்தது என்பதனையிட்டு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகூடிய ஆரம்ப சுப்பிரி ஜயமல்லத் தொகையான 7.5 கோடி ஜயமல்லவுடன் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டின் 513 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 14 50 29 213 அளவு பிரடாண்டமான ஜயமல்லத் தொகையை வென்றெடுப்பதற்கு கடந்த 2019.10.27 ஆந் திகதிய ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி மாவட்டத்தின் கொடகவெல பிரதேசத்தின் அதிர்ஷ்டசாலி ஒருவரினால் முடிந்தது. 

அவ் வெற்றிவாகை சூடிய லொத்தர் சீட்டினை அபிவிருத்தி லொத்தர் சபையின் கொடகவெல விற்பனை முகவர் திருமதி. ஆர்.பீ. சோமா பிரியந்தி அவர் விற்பனை   செய்துள்ளார்.  

2016 ஆம் ஆண்டில் சந்தையில் வெளியிடப்பட்ட கோடிபதி சனிக்கிழமை லொத்தர் சீட்டு கோடிபதி கப்ருக என்ற பெயரினால் கவர்ச்சிகரமானதாக  வெளியிட்ட நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது என்பதுடன் மூன்று (03) வருடங்கள் என்ற குறுகிய காலத்தினுள் இவ்வாறான சுப்பிரி ஜயமல்லத் தொகைக்குரிய உரிமையாளரை உருவாக்கியது குறித்து மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக உள்ளது.    

இதுவரை கோடிபதி (சனிக்கிழமை) தற்போதைய கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டின் மூலம் 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுப்பிரி வெற்றியாளர்கள் எட்டு (08) பேரினை உருவாக்கியுள்ளதோடு, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த பணப் பரிசில் தொகையின் பெறுமதி 751 மில்லியன் ரூபாவாகும். அதாவது 75.1  கோடியாகும்.

கோடிபதி கப்ருக இலங்கையின் லொத்தர் சீட்டு வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் லொத்தர் சீட்டு கப் ருக (கற்பகத் தரு)  என்றவாறு அமைவதோடு, அபிவிருத்தி லொத்தர் சபை தனது சகல வாடிக்கையாளர்களுக்கும் என்றென்றும் வெற்றிகள் கிடைக்கப் பெற வேண்டும் என சாதனை படைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.  



26-December-2024

...

10-December-2024

...

சிறப்புச் செய்தி