அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சிறப்பாக உங்களை வெல்ல வைக்கும் “சனிதா சுபிரி 5000” விசேட லொத்தர் சீட்டு தற்போது சந்தையில்!

26-May-2025

நான்கு தசாப்தங்களாக சூரியனைப் போல உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்த சனிதா லொத்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க 5000வது சீட்டிழுப்பை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட “சனிதா சுபிரி 5000" விசேட லொத்தர் சீட்டு, 2025.05.26 அன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சட்டத்தரணி ஹேமந்த ஸ்வர்ணதிலக்க அவர்களின் தலைமையிலும், அநுர ஜயரத்ன உள்ளிட்ட முகாமைத்துவத்தின் பங்கேற்புடனும் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் வெளியிடப்பட்டது.

“சனிதா சுபிரி 5000" விசேட சீடடிழுப்பு, சனிதா லொத்தரின் 5000வது சீட்டிழுப்பு நடைபெறும் நாளான 2025 ஜூன் 19 அன்று நடைபெற உள்ளது. அன்று உங்களுக்கு ஆறு கோடி ரூபாய்க்கும் அதிகமான சுப்பர் பரிசுப்பொதி, இருபது இலட்சம் ரூபாய் வரையிலான இதர பரிசுகள் மற்றும் செகன்ட சான்ஸ் விசேட பரிசுகளுடன், பின்வரும் பணப் பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

“சனிதா சுபிரி 5000" லொத்தர் சீட்டின் முன்புறம் 6 இலக்க விசேட எண்; மற்றும் 4 இலக்க விசேட எண் அச்சிடப்பட்டுள்ளது. 6 இலக்க விசேட எண் பொருந்துவதன் மூலம் பல 50,000/- ரூபாய் பணப் பரிசுகளையும், 4 இலக்க இரண்டாவது விசேட எண் பொருந்துவதன் மூலம் பல 5,000/- பணப் பரிசுகளையும் வெற்றியாளர்கள் வெல்லலாம்.

ஆகவே, நீங்களும் நான்கு தசாப்த கால நம்பிக்கையைப் பாதுகாக்கும் சனிதா லொத்தரின் “சனிதா சுபிரி 5000" விசேட லொத்தர் சீட்டுகளை நம்பிக்கையுடன் வாங்கி, உங்கள் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளவும்.

 



16-May-2025

...

09-May-2025

...

23-April-2025

...

சிறப்புச் செய்தி