அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபை தனது 37 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது

19-January-2020

வாழ்வை ஒளிமயமாக்கும் அபிவிருத்தி  லொத்தர் சபை இந்த சனவரி மாதம் 19 ஆந் திகதியன்று தனது 37 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடவுள்ளது. இலங்கை வாழ் மக்களுக்காக உயர் நோக்கங்களை  முன்னிலைப்படுத்தி 1983 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆந் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் நிலையம் அன்றிலிருந்து இன்று வரை கடந்து வந்த தனது 37 வருடக் காலப்பகுதியினுள் அடையப் பெற்ற மைற்கற்களைப் போன்றே அது உருவாக்கிய வெற்றியாளர்களுக்கும் அளவே இல்லை. இந் நாட்டு மக்கள் லொத்தர் சீட்டொன்றிற்காக செலவிடப்படும் இருபது ரூபாவினை மீளவும் அவர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும் அபிவிருத்தி  லொத்தர் சபை இந்நாட்டில் அநேகமானவர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் அதிர்ஷ்டத்துக்கு உட்படுத்துவதோடு நாட்டிற்காக சுகாதார மற்றும் கல்வி சார் பணிகளுக்கான பங்களிப்புக்களையும் வழங்குகின்றது.

சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் மூலம் 2.2 மில்லியன்  ரூபா அளவுடைய  நிதியை முதலீடு செய்து இச் சபை ஆரம்பிக்கப்படுவது சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நிதியத்தின் நிதியியல் சார் அடிப்படையை பலப்படுத்துவதே அதன் இறுதி எதிர்பார்ப்பாகும்.  அதற்கமைய சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்காக தனது பங்கிலாபத்தை நன்கொடை செய்யும் ஒரே அரச நிறுவனமாக அபிவிருத்தி  லொத்தர் சபை விளங்குகின்றது. அபிவிருத்தி  லொத்தர் சபை அதன் ஆரம்ப காலங்களில் அபிவிருத்தி  லொத்தர் நிலையம் என அறிமுகப்படுத்தப்பட்டதோடு அதன் பின்னர் அபிவிருத்தி  லொத்தர் நம்பிக்கைப் பொறுப்பு என 1993 ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டது. 1997 ஆகஸ்ட் மாதம் 12 ஆந் திகதியன்று 1997 இலக்கம் 20 இனையுடைய அபிவிருத்தி  லொத்தர் சபைச் சட்டத்தின் மூலம் இந் நம்பிக்கைப் பொறுப்பு அபிவிருத்தி  லொத்தர் சபை என  பெயர் மாற்றம் பெற்றது.

நாளுக்கு நாள் நாட்டிற்காக வழங்கிய பங்களிப்பினை துரிதப்படுத்தி  முன்னோக்கிச் சென்ற அபிவிருத்தி  லொத்தர் சபை 1983 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் சனாதிபதி நிதியத்திற்காக அபிவிருத்தி  லொத்தர் சபை வழங்கிய தாராளப் பங்களிப்புத் தொகை 27,115,374,346 ரூபாவாகும். ஆரம்பம் முதல் இன்று வரை பல்கலைக்கழக மாணவர்களின் உயர் கல்விக்காக வழங்கிய மகபொல புலமைப் பரிசில்களின் அளவு மூன்று இலட்சத்து இருபத்தைந்தினை எட்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் சனாதிபதி நிதியத்துக்கு வழங்கிய பங்களிப்புத் தொகை சுமார் 235 கோடியாகும்.

அவ்வாறான பங்களிப்பினை வழங்குவதற்கு அபிவிருத்தி  லொத்தர் சபைக்கு சக்தியாக அமைந்த ‘சனிக்கிழமை அதிர்ஷ்டம்’,‘அபிவிருத்தி  அதிர்ஷ்டம்’,‘லக்கின அதிர்ஷ்டம்’,‘ஜயோதா’,‘கோடிபதி கப்ருக’, ‘சுப்பர் போல்’, ‘அத கோடிபதி’ மற்றும்  உடனடி லொத்தர் சீட்டுக்கள் என்பன அபிவிருத்தி  லொத்தர் சபைக் குடும்பத்தின் லொத்தர் சீட்டுக்களினாலாகும்.

அவ்வாறான இணையற்ற பணியில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தின் வைகறையை சுமந்து நாடு பூராகவும் செல்லும் அபிவிருத்தி  லொத்தர் சபை அதன்  அதிர்ஷ்டத்தினை பெறுகின்றவர்கள் அதனை  கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் மாத்திரமன்றி அனைவரும் அடைந்து கொள்கின்றார்கள்.  அபிவிருத்தி  லொத்தர்  விற்பனை வலையமைப்புடன் கைகோர்த்து நிற்கும் விநியோகஸ்த விற்பனை முகவர்கள் 89 பேரும், 2500 க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களுக்கும் மற்றும் அதன் கீழ் சேவையாற்றும் இருபதாயிரத்துக்கும் அதிகமான விற்பனை உதவியாளர்களுக்கும் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த பிறப்பிடமாக அபிவிருத்தி  லொத்தர் சபை திகழ்கின்றது.

37 வருடங்கள் பூராகவும் அபிவிருத்தி  லொத்தர் சபை மீது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை அவ்வாறே தொடர்ந்தும் பேணிச் செல்லப்படும் என 37 ஆண்டு நிறைவினைக்  கொண்டாடுகின்ற அபிவிருத்தி  லொத்தர் சபை தனது அறிவித்தலை விடுத்துள்ளது. 



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி