அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லக்கின அதிர்ஷ்டம் சுப்பிரி வெற்றியாளர்கள் மூவருக்கும் பத்து இலட்சத்தை வெற்றியீட்டிய வெற்றியாளர்கள் இருபத்தியெட்டு பேருக்கும் அபிவிருத்தி லொத்தர் சபையினால் காசோலைகள் வழங்கப்பட்டது.

28-January-2020

அபிவிருத்தி லொத்தர் சபையினால் கடந்த இரு மாத காலப்பகுதியினுள் இடம்பெற்ற சீட்டிலுப்புக்களின் ஊடாக உருவாக்கிய வெற்றியாளர்களுக்கிடையில் பத்து இலட்சத்துடைய மற்றும் அதனை விடக் கூடுதலான பணத் தொகையை வெற்றியீட்டியவர்களுக்கான காசோலைகள்  வழங்கி வைக்கும் நிகழ்வு 2020.01.24 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.   

அதன் போது லக்கின அதிர்ஷ்டம் 2741 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை 4,306,388 ஆன பணத் தொகையை வென்ற படல்கம பிரதேசத்தைச் சேர்ந்த திரு. எச்.ஜே.பி. ரணசிங்க அவர்களுக்குரிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, அவ் வெற்றியாளரை உருவாக்கிய லொத்தர் சீட்டினை விற்பனை செய்த தூனகஹ விற்பனை முகவரான திரு. எச்.கே. ஜே. த சில்வா அவர்களுக்கும் காசோலையுடன் கூடிய சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

 லக்கின அதிர்ஷ்டம் 2727 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை 3,536,650 ஆன பணத் தொகையை வென்ற மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த திரு. என். பரதீஸ் அவர்களுக்குரிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு அவருக்கு அவ் அதிர்ஷ்டத்தையுடைய லொத்தர் சீட்டை விற்பனை செய்த கண்டி விற்பனை முகவரான திருமதி. என்.என்.  குணதிலக அவர்களுக்குரிய காசோலையுடன் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டின் 2717 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 2,000,000 ஆன பரிசினை வெற்றியீட்டிய கொழும்பு 08 இல் வசிக்கும் திருமதி. எம்.ஆர். சித்தி அவர்களுக்குரிய காசோலை வழங்கி வைக்கப்பட்டதுடன், அவ் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த திக்வல்லை விற்பனை முகவர் திரு. எல்.எம்.எஸ். பிரியந்த அவர்களுக்கும் அதன் போது காசோலையுடன் சான்றிதழ்ப் பத்திரம் வழங்கப்பட்டது.

மேலும், அபிவிருத்தி லொத்தர் சபையின் அத கோடிபதி, சனிக்கிழமை அதிர்ஷ்டம், சுப்பர் போல், கோடிபதி கப்ருக மற்றும் ஜயோதா ஆகிய லொத்தர் சீட்டுக்களின் மூலமும் பத்து இலட்சத்துடைய பணப் பரிசில்களை வெற்றியீட்டிக் கொண்ட 28  வெற்றியாளர்களுக்கும் அந் நிகழ்வின் போது காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி