அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

ஜுன் 01ம் திகதி முதல் அபிவிருத்தி லொத்தர் சபையின் அனைத்து லொத்தர்களையும் மீண்டும் சந்தைக்கு வெளியிடல்.

28-May-2020

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஜுன் மாதம் 01ம் திகதி முதல் ஆரம்பிக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய அபிவிருத்தி லொத்தர் சபையின் அனைத்து ரக லொத்தர்களையும் அன்றைய தினம் கொள்வனவு செய்ய கொள்வனவாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக 2020.03.17ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் அச்சிடப்பட்ட அனைத்து லொத்தர்களும் விற்பனையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பினும் அவ் லொத்தர்களை அழிக்காது மீண்டும் திகதியினை அச்சிட்டு சந்தைக்கு வெளியிட அபிவிருத்தி லொத்தர் சபை தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டினுல் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை படிப்படியாக குறையும் நிலையில் லொத்தர் கொள்வனவாளர்கள் லொத்தர் கொள்வனவில் காட்டும் ஈடுபாட்டினை ஆறாயும் முகமாக அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் அவ் அச்சிடப்பட்ட லொத்தர்களில் மீண்டும் புதிய திகதி அச்சிடப்பட்டு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதன்போது லொத்தர் விற்பனையில் காணப்பட்ட திருப்திகரமான நிலையினால் மீண்டும் அபிவிருத்தி லொத்தர் சபை அனைத்து லொத்தர்களையும் சந்தைக்கு ஜுன் மாதம் 01ம் திகதி முதல் வெளியிட அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.

புதிய திகதி அச்சிடப்பட்ட ராசி அதிர்ஷ்டம் லொத்தர் 2020.05.18ம் திகதி முதல் சந்தைக்கு வெளியிடப்பட்டதுடன் வருகின்ற மே மாதம் 26ம் திகதி முதல் கடந்த மாதங்களுக்குரிய ராசி அதிர்ஷ்டம் லொத்தர்கள் போன்று அதகோடிபதி லொத்தர்களும் மீண்டும் திகதி அச்சிடப்பட்டு சந்தைக்கு வெளியிடப்படும்.

கொரோனா வைரஸ் காரணமாக லொத்தர் விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் 2020.04.04ம் திகதி சீட்டிழுக்கப்படவிருந்த 'ஷனிதா அவுருது வாசனா" விசேட லொத்தர் சந்தைக்கு வெளியிடப்பட்டிருந்தமையினால் அவ் லொத்தரின் திகதி மாற்றம் செய்யப்படாமல் சந்தையில் காணப்படுவதுடன் 2020.06.13ம் திகதி அவ் விசேட சீட்டிழுப்பு நடாத்தப்படவுள்ளது என்பதனை அபிவிருத்தி லொத்தர் சபை அறிவிக்கின்றது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை வலைப்பின்னலுக்கு உலக சுகாதார அமைப்பின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட பாதுகாப்பு கையுறைகள் மற்றும் சரியான சுகாதார அறிவுரைகள் வழங்கல் அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறே மீண்டும் லொத்தர் விற்பனையினை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் அனைத்து விற்பனை முகவர்கள், விற்பனை உதவியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களாகிய உங்களிடம் அபிவிருத்தி லொத்தர் சபையானது சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைய மிகவும் பாதுகாப்பாக லொத்தர் விற்பனை மற்றும் கொள்வனவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.

 



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி