அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் தென் ஆசியாவின் முதல் டிஜிட்டல் லொத்தர் DLB Sweep App ஊடாக

29-September-2020

லொத்தர் வரலாற்றின் பாரிய தொழில்நுட்ப அடித்தளத்துடன் முதல் டிஜிட்டல் லொத்தராகிய 'சசிரி" லொத்தரினை சந்தைக்கு அறிமுகப்படுத்தல் இன்றைய தினம் (2020.09.29) நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆடிகல அவர்களின் தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது.

அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட DLB Sweep App ஊடாக இன்று முதல் 'சசிரி" டிஜிட்டல் லொத்தர்களை கொள்வனவு செய்ய முடியும். அத்துடன் ராசி அதிர்ஷ்டம் , சுப்பர் போல் மற்றும் சனிதா போன்ற லொத்தர்களையும் Online ல் கொள்வனவு செய்ய முடியும்.

'சசிரி" லொத்தர் தென் ஆசியாவின் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான லொத்தர் ஆவதோடு அதனை Online ஊடாகவும், அச்சிடப்பட்ட லொத்தராகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

'சசிரி" லொத்தர் சந்தைக்கு வெளியிடப்பட்டதன் பிரதான நோக்கம், கடந்த கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கொவிட் நிதியத்திற்கு நிதி பங்களிப்பினை செய்வதற்காகும். அதற்கமைய இவ் லொத்தர் விற்பனையின் ஊடாக பெறப்படும் இலாபம் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்படுவதோடு ஜனாதிபதி நிதியம் ஊடாக அந் நிதி கொவிட் நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இன்றைய தினம் சந்தைக்கு வெளியிடப்படும் இவ் 'சசிரி" டிஜிட்டல் லொத்தரின் முதல் சீட்டிழுப்பு வருகின்ற ஒக்டோபர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதிலிருந்து வாரத்தின் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குறித்த சீட்டிழுப்பு நடைபெறும். அதன்போது மூன்று இலக்கங்களை பொருத்தி ஒரு இலட்சம் பரிசுகள் பலவற்றுடன் சிறு பரிசுகள் பலவற்றையும் வெற்றிக்கொள்ளும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு;ள்ளது.

சசிரி டிஜிட்டல் லொத்தர் ஊடாக பரிசுகளை வெல்லும் வெற்றியாளர்களுக்கு குறித்த பணத்தினை அவர்களின் வங்கி கணக்குகளுக்கே வைப்பிடக்கூடியவாறு கணினி தொழில்நுட்பத்தினூடாக செயற்படுத்தப்படுகின்றது. அச்சிடப்பட்ட லொத்தர்களுக்குரிய பரிசுகள் வழமைப்போல் விநியோக விற்பனை முகவர்களிடம் அல்லது பிரதான அலுவலகத்திற்கு வருகைத்தந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது காணப்படும் சம்பிரதாயபூர்வ லொத்தர் சீட்டிழுப்பிற்கு அப்பாற்பட்டு புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இச் சீட்டிழுப்புக்கள் நடைபெறவுள்ளதென அபிவிருத்தி லொத்தர் சபை அறிவிக்கின்றது.

லொத்தர் சந்தையில் புரட்சிகரமான புதிய அனுபவத்துடன் உங்களிடம் வரும் சசிரி டிஜிட்டல் லொத்தரினை கொள்வனவு செய்வதற்கு www.dlb.lk/apps என்ற லிங்க்கினை பயன்படுத்தி உங்களின் ஸ்மார்ட் கைதொலைபேசியினூடாக அல்லது டெப் இயந்திரத்தினூடாக DLB Sweep App செயலியினை தரவிரக்கம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அதிர்ஷ்டத்தினை உரித்தாக்கிக்கொள்ளுமாறு அபிவிருத்தி லொத்தர் சபை தனது லொத்தர் கொள்வனவாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றது.



10-December-2024

...

29-November-2024

...

சிறப்புச் செய்தி