அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் 38வது ஆண்டு விழா.

20-January-2021

என்றென்றும் உங்கள் வாழ்வின் அதிர்ஷ்டத்தின் நம்பிக்கையாகிய 'வாழ்க்கைக்கு ஒளியூட்டும் அபிவிருத்தி லொத்தர்" இவ் ஜனவரி 19ம் திகதி தனது 38வது ஆண்டு விழாவினை கொண்டாடுகின்றது. இலங்கையர்களுக்காக உன்னதமான குறிக்கோளுடன் 1983ம்; ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் மையம் அன்றிலிருந்து இன்று வரை கடந்து சென்ற 38 ஆண்டு காலத்தில் அடைந்த வெற்றிகளும் உருவாக்கிய வெற்றியாளர்களும் அதிகமே. நீங்கள் லொத்தர் ஒன்றினை கொள்வனவு செய்ய செலவிடும் 20 ரூபாய் பணம் மீண்டும் உங்களுக்கே பரிசுகளாக வழங்கப்படுவதன் மூலம் அபிவிருத்தி லொத்தர் சபை இந் நாட்டு மக்கள் பலரின் வாழ்க்கையினை ஒரே இரவில் அதிஷ்டகரமாக மாற்றுவதுடன் நாட்டிற்காக சுகாதார மற்றும் கல்வி துறைகளுக்கு உதவி வருகின்றது.

அதி உன்னதமான நோக்கத்துடன் முன்னோக்கி வந்த அபிவிருத்தி லொத்தர் சபை 1983ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கிய இடைவிடா நிதிபங்களிப்பு 30,209,462,389.00 ரூபாய் ஆகும். மேலும் இருதய அறுவை சீகீச்சை, சிருநீரக மாற்று அறுவை சீகீச்சை உட்பட பலதரப்பட்ட நோயாளர்களுக்கு நிதி உதவி வழங்கி வருவதுடன் மஹபொல புலமைப்பரிசிலுக்காகவும் ஜனாதிபதி நிதியத்தினூடாக நிதி பங்களிப்பு செய்து வருகின்றது. ஆரம்பம் முதல் இதுவரை பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் உயர்கல்விக்காக வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 325,000 க்கு அதிகமாகும். கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் ஜனாதிபதி நிதியத்திற்காக வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பு 2.29 பில்லியன் ரூபாய் ஆகும். 2020ம் ஆண்டில் மட்டும் உருவாக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 7,927,745,313.00 ரூபாய் ஆகும்.

அவ் அனைத்துக்காகவும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு சக்தியாக அமைந்தது 'சனிதா", 'ராசி அதிர்ஷ்டம்" , 'அத கோடிபதி", 'சுப்பர் போல்", 'அபிவிருத்தி அதிர்ஷ்டம்", "ஜயோதா", 'கோடிபதி கப்ருக", 'சசிரி" மற்றும் உடனடி லொத்தர்களாகும்.

தற்காலத்துடன் புதுப்பிக்கப்பட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைக்கும் அபிவிருத்தி லொத்தர் சபை லொத்தர் வியாபாரத்தின் உயர்வுக்காக லொத்தர் கொள்வனவாளர்களின வசதிக்காக புது தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி மேற்கொண்ட மாற்றங்கள் பல உண்டு. "DLB Sweep App" அதில் முதலிடம் வகிக்கின்றது. லொத்தர் கொள்வனவு, லொத்தர் முடிவுகளை பார்த்தல் ஆகிய அனைத்து செயற்பாடுகளையும் கையடக்க தொலைபேசியினூடாக செய்யக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. SMS Lottery ஆரம்பித்தலும் அபிவிருத்தி லொத்தர் சபை பெற்ற வெற்றியாகும்.

ஆசியாவின் முதல் டிஜிட்டல் லொத்தராகிய 'சசிரி" லொத்தரினை அறிமுகப்படுத்தல் 38 வருட அபிவிருத்தி லொத்தர் சபை வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாகும்.

மேலும் அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் அதிர்ஷ்டத்தினை அடைவது லொத்தர்களை கொள்வனவு செய்யும் கொள்வனவாளர்கள் மாத்திரமில்லை. அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை வலைப்பின்னலுடன் கைகோர்த்துள்ள விநியோகஸ்தர்கள் 89 பேர், 2500க்கு அதிகமான விற்பனை முகவர்கள் மற்றும் அவர்களின் கீழ் கடமையாற்றும் விற்பனை உதவியாளர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கியுள்ளது.

கடந்து வந்த காலத்தில் அபிவிருத்தி லொத்தர் சபை தமது விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்காக மேற்கொண்;ட பணிகள் பலவாகும். விற்பனை முகவர்களின் முதன்மை வேண்டுகோளாகிய கமிஷன் தொகை அதிகரிப்பு தொடர்பாக கவனத்திற்கொண்டு ரூ.3.50 கமிஷன் தொகையினை ரூ.3.75 ஆக அபிவிருத்தி லொத்தர் சபை அதிகரித்துள்ளது. 2018 மற்றும் 2019 வருடங்களில் இலகு விலையில் புத்தம் புதிய விற்பனை குடில்கள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டது. சேதமடைந்த லொத்தர் விற்பனை குடில்கள் மறுசீரமைப்பதற்கு ரூ.20,000 பணத்தொகை வழங்கப்பட்டது. 2021 ம் ஆண்டிலும் அச் செயற்பாட்டினை மேற்கொள்ள அபிவிருத்தி லொத்தர் சபை எதிர்பார்க்கின்றது.



07-November-2024

...

06-November-2024

...

சிறப்புச் செய்தி