அபிவிருத்தி அபிமானம் 2022 – கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு
அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர் வலையமைப்பினை ஊக்குவிக்கும் முகமாக அபிவிருத்தி அபிமானம் 2022 கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 ஜனவரி மாதம் 29ம் திகதி மஹவெலி ரீச் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ விவசாய அமைச்சர் திரு.மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திரு.சமிந்த கிரன்கொட, திரு. ரஞ்சித் பண்டார ஆகியோரும், கண்டி மாநகர சபையின் கௌரவ மேயர் திரு.கேசர டி. சேநாநயக்க , வத்தேகம நகர சபையின் கௌரவ தலைவர் திரு.பி.எம்.ரவீந்திர பண்டார அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின கௌரவ தலைவர் திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள் மற்றும் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள் ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்றது.
2022 புதிய வருடத்தில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் லொத்தர் விற்பனையினை அதிகரிக்கும் முகமாக புதிய திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்களாக பலசெயற்திட்டங்கள் குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்போது விற்பனை முகவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை லொத்தர் சீட்டு வரலாற்றில் அதிகூடிய சுப்பிரி ஜயமல்லவுக்குப் அடுத்தபடியாக வெற்றியாளரை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டினால் முடிந்தது என்பதனையிட்டு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் “DLB யின் பராமரிப்பு” என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் மற்றொரு அங்கம் கடந்த நாட்களில் இடம்பெற்றது.
<...