“அபிவிருத்தி அபிமானி 2022” பதுளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 06ம் திகதி பதுளை ஹெரிடேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் திரு.தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர், மேஜர் திரு. சுதர்ஷன தெனிபிடிய, பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாமர சம்பத் தசநாயக, நகரத் தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. அஜித் குணரத்ன நாரகல மற்றும் பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை காவல்துறையினை பிரதிநிதித்துவம் செய்த உயர் அதிகாரிகள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பில் நடைபெற்றது.
2022 ம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் லொத்தர் விற்பனையினை அதிகரிக்கச் செய்யும் முகமாக புது திட்டங்கள் அடங்கிய வெவ்வேறு செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இங்கு நடைபெற்றதுடன் விற்பனை முகவர்களை பாறாட்டும் முகமாக சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை மிக்க நம்பிக்கையுடன் கொள்வனவு செய்து அதிர்ஷ்டசாலிகளாக மாறிய நாற்பத்தொன்பது போருக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.08.20 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒரு மாதத்தினுள் லக்கின அதிர்ஷ்டம் உரு...