அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

தெற்கிலிருந்து வடக்கிற்கு வலம்புரி எனும் பெயரில் விசேட லொத்தர் ஒன்று!

09-September-2022

அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்துள்ள வட கிழக்கு லொத்தர் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டத்தினை உரித்தாக்கும் முகமாக வலம்புரி பெயரில் விசேட லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்த அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையெங்கும் அதிர்ஷ்டத்தின் செய்தியினை கொண்டுச் செல்லும் அபிவிருத்தி லொத்தர் சபை தமது வட கிழக்கு மக்களுக்காக அறிமுகப்படுத்தும் இவ் விசேட லொத்தரினை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வு 2022.09.06ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதிர்ஷ்டத்தின் வெற்றி நாதம் எனும் வலம்புரி விசேட லொத்தர் மூலம் இரண்டு மில்லியன் வரையிலான பணப்பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. மூன்று இலக்கங்களுடன் ராசி அடையாளம் பொருந்துமாயின் இருபது இலட்சம் பணப்பரிசும், மூன்று இலக்கங்கள் மட்டும் பொருந்துமாயின் ரூ.100,000 பணப்பரிசுகளும், இரண்டு இலக்கங்கள் பொருந்துமாயின் 500 ரூபாய் பணப்பரிசும், யாதாயினும் ஒரு இலக்கம் அல்லது ராசி அடையாளம் பொருந்துமாயின் 50 ரூபாய் பரிசுகள் பலவற்றையும் வெல்ல முடியும்.

வருகின்ற ஒக்டோபர் மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ள வலம்புரி விசேட லொத்தரின் சீட்டிழுப்பு ஊடாக பரிசுக் கடலில் தமது அதிர்ஷ்டத்தினை தேடிச் செல்ல தற்போது வட கிழக்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் அதற்காக இன்றே உங்களின் வலம்புரி லொத்தரினை கொள்வனவு செய்திடுங்கள்.



22-June-2022

...

18-March-2022

...

சிறப்புச் செய்தி