அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

நாளுக்கு நாள் புதிதாகும் அபிவிருத்தி லொத்தர் சபை...

20-October-2022

அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை புகையிரதம் மூலமாக விநியோகிப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் ஊடக  தனித்துவமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு அரச நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இதன் மூலம் பயனடைவதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய பொருட்களை கொண்டு செல்லும் திறன் புகையிரத திணைக்களத்திற்கு இருப்பதாக கௌரவ அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார். மேலும் எதிர்காலத்தில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு மற்ற தரப்பினருடன் இதே போன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைல்கள் எடுத்த்தாக கூறியிருந்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல, பொது முகாமையாளர் திரு. அனுர ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் (நிர்வாகம்/ மனிதவள) திரு.பிரசாத் ரணசிங்க ஆகியோர் அபிவிருத்தி லொத்தர் சபையை பிரதிநிதித்துவப்படுத்த இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.



02-January-2025

...

26-December-2024

...

10-December-2024

...

சிறப்புச் செய்தி