அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சங்வர்தன அபிமான் 2024" தேசிய மாநாடு

12-August-2024

அபிவிருத்தி லொத்தர் சபையின் பலமாக விளங்கும்> நாடு முழுவதிலும் உள்ள எமது விற்பனை விநியோகஸ்தர்களால் 2023 இல் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சந்தைப்படுத்தல் உத்திகளைப் பற்றி தெரிவிப்பதற்காகவும் "சங்வர்தன அபிமன் 2024" தேசிய மாநாடு 29 ஏப்ரல் 2024 அன்று பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களின் தலைமையில் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் அபிவிருத்தி லொத்தர் சபையின் கெளரவத் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஜித் குணரத்ன நாரகல தலைமையில் நிறைவு பெற்றது.
 
இந்நிகழ்வில் பாராளுமன்ற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் சபை, முன்னாள் தலைவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் சிரேஷ்ட முகாமையாளர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

 



சிறப்புச் செய்தி