அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற விசேட தேவையுடன் கூடிய விற்பனை உதவியாளார்களுக்கான ட்ரைசைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அதன் ஓர் அங்கமாக சனாதிபதி அவர்களின் திருக்கரங்களால் விசேட தேவையுடன் கூடிய விற்பனை உதவியாளர்களுக்கு ட்ரைசைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு சனாதிபதிச் செயலாளர் உதய ராஜித செனவிரத்ன அவர்கள், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன போன்றோருடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் வலய முகாமையாளர் மலிந்த பலகல்ல அவர்களும் சமூகமளித்து சிறப்பித்தார்கள்.
அத கோடிபதி லொத்தரின் விற்பனையினை அதிகரிக்கும் வகையில் 2019 ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை செயற்படுத்தப்பட்ட விசேட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அதிக விற்பனையினை மேற்கொண்ட மாவட்ட விநியோக விற்பனை முகவர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கல் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி...