அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை உதவியாளர்களுக்கு அதிமேதகு சனாதிபதி அவர்களின் கரங்களினால் ட்ரைசைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

16-August-2019

அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது.  அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற விசேட தேவையுடன் கூடிய விற்பனை உதவியாளார்களுக்கான ட்ரைசைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அதன் ஓர் அங்கமாக சனாதிபதி அவர்களின் திருக்கரங்களால் விசேட தேவையுடன் கூடிய விற்பனை உதவியாளர்களுக்கு ட்ரைசைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.  

இந் நிகழ்வுக்கு சனாதிபதிச் செயலாளர் உதய ராஜித செனவிரத்ன அவர்கள், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன போன்றோருடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் வலய முகாமையாளர் மலிந்த பலகல்ல அவர்களும் சமூகமளித்து சிறப்பித்தார்கள்.

 

 



15-October-2019

...

“ DLB யின் பராமரிப்பு” ஆறாவது வைத்திய முகாம் பதுள்ளையில்.

01-October-2019

“ DLB யின் பராமரிப்பு”  ஆறாவது வைத்திய முகாம் பதுள்ளையில்.

அபிவிருத்தி  லொத்தர் சபையின்  “DLB யின் பராமரிப்பு” என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் மற்றொரு அங்கம் கடந்த  நாட்களில் இடம்பெற்றது.

<...

சிறப்புச் செய்தி