அத கோடிபதி லொத்தர் உருவாக்கிய கோடிபதி வெற்றியாளர்கள் நால்வருக்கு கெளரவ பிரதமர் அவர்களினால் காசோலை வழங்கல்.
27-February-2020
2020ம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலத்தில் அத கோடிபதி லொத்தர் உருவாக்கிய சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கும் நிகழ்வு 2020.02.26ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மற்றும் கெளரவ நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அதன்போது பின்வரும் வெற்றியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் கெளரவ பிரதமரின் கரங்களினால் கசோலைகளை பெற்றுக்கொண்டனர்.
- 2020.01.22ம் திகதி நடைபெற்ற அத கோடிபதி லொத்தரின் 860வது வாரத்தின் ரூ.59,907,350/- பரிசுப்பொதியினை வென்ற நிகவெரடிய பிரதேசத்தினை சேர்ந்த திரு.ஆர்.எம்.கருணாரத்ன அவர்கள் மற்றும் அப் பரிசுக்குரிய அதிர்ஷ்ட லொத்தரினை விற்பனை செய்த நிகவெரடிய பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திரு.ஜீ.எம்.டப்.அபொன்சு அவர்கள்.
- 2020.01.28ம் திகதி நடைபெற்ற அத கோடிபதி லொத்தரின் 866வது வாரத்தின் ரூ.51,794,130/- பரிசுப்பொதியினை வென்ற பலங்கொட பிரதேசத்தினை சேர்ந்த திரு.கே.ஜீ.சீ.ஹேமகுமார அவர்கள் மற்றும் அப் பரிசுக்குரிய அதிர்ஷ்ட லொத்தரினை விற்பனை செய்த ஹிங்குரான பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திரு.கே.ஏ.எல்.ஸ்வர்ணகுமார அவர்கள்.
- 2020.02.07ம் திகதி நடைபெற்ற அத கோடிபதி லொத்தரின் 876வது வாரத்தின் ரூ.53,144,515/- பரிசுப்பொதியினை வென்ற மெதமஹநுவர பிரதேசத்தினை சேர்ந்த திரு.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மற்றும் அப் பரிசுக்குரிய அதிர்ஷ்ட லொத்தரினை விற்பனை செய்த திகன பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திரு.டப்.ஏ.பீ.பீ.அலடின் பெரேரா அவர்கள்.
- 2020.02.22ம் திகதி நடைபெற்ற அத கோடிபதி லொத்தரின் 891வது வாரத்தின் ரூ.55,015,700/- பரிசுப்பொதியினை வென்ற மாத்தறை பிரதேசத்தினை சேர்ந்த திரு.ரவீந்திர குமார் அவர்கள் மற்றும் அப் பரிசுக்குரிய அதிர்ஷ்ட லொத்தரினை விற்பனை செய்த தெவிநுவர பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திரு.கே.ஜீ.ஷாந்த அவர்கள்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.ஜகத் பீ. விஜேவீர, பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன, பிரதி பொது முகாமையாளர் (நிதி) செல்வி.விஜிதா சோமரத்ன மற்றும் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு.சானக தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
×