அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் சேவை செயல்திறனுக்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுடன் வலைப்பின்னலில் இணைதல்.

14-March-2020

புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சேவை செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் அபிவிருத்தி லொத்தர் சபையும் தமது செயல்திறனை அதிகரித்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய அபிவிருத்தி லொத்தர் சபை இலங்கையின் பிரதான அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பனவற்றுடன் இணைந்து தத்தமது கணினி அமைப்புகளை அபிவிருத்தி லொத்தா; சபையின் கணினி அமைப்புடன் இணைத்து நிறுவன பணப்பரிமாற்றங்களை மேலும் செயல் திறன் வாய்ந்ததும் வேகமாகவும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகளை கணக்குகளில் பதியும் செயற்பாட்டினூடாக அபிவிருத்தி லொத்தர் சபையின் 92 விநியோக விற்பனை முகவர்களுக்கும் 2500 விற்பனை முகவர்களுக்கும் 20000க்கு அதிகமான விற்பனை உதவியாளர்களுக்கும் நன்மை கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ் வலைப்பின்னல் தொழில்நுட்ப நடவடிக்கைகளின் முக்கியத்துவமானது நிதி அமைச்சின் கீழ் இயங்கும் பிரதான நிறுவனங்கள் மூன்று ஒன்றாக இணைந்து தமது சேவையினை மென்மேலும் வெற்றிகரமாக தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகும்.

அபிவிருத்தி லொத்தர் சபையுடன் கைக்கோர்த்துள்ள விநியோக விற்பனை முகவர்கள், விற்பனை முகவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைக்கு அதிர்ஷ்டத்தினை கொண்டுவரும் அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் நாளாந்தம் உருவாகும் கோடீஷ்வரர்கள் மற்றும் இலட்சாதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அரச நிறுவனம் என்ற வகையில் இந் நாட்டின் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி லொத்தர் சபை தமது உயரிய பங்களிப்பினை வழங்குகின்றது. அவ்வாறே அபிவிருத்தி லொத்தர் சபை 2019ம் ஆண்டில் தமது இயக்க இலாபமாக ரூ.2,668,792,667 (2.6 பில்லியன்) பணத்தினை ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கியுள்ளதுடன் 2019ம் ஆண்டு இலக்கினயும் தாண்டியுள்ளதுடன் 17.8 பில்லியன் விற்றுமுதலினை ஈட்டி அபிவிருத்தி லொத்தர் சபை அடைந்த வெற்றியாக மேலும் அபிவிருத்தி லொத்தர் சபை அறிவிக்கின்றது.

மேலும் அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் இலத்திறனியல் லொத்தர் ஒன்றினை (e-Lottery) அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் பரீட்சிப்பு மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ் இலத்திறனியல் லொத்தரினை இலங்கையர்கள் அனைவருக்கும் கொள்வனவு செய்யும் வாய்ப்பினை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அபிவிருத்தி லொத்தர் சபை அறிவிக்கின்றது.



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி