அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

.

29-January-2022

அபிவிருத்தி அபிமானம் 2022 – கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு
அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர் வலையமைப்பினை ஊக்குவிக்கும் முகமாக அபிவிருத்தி அபிமானம் 2022 கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 ஜனவரி மாதம் 29ம் திகதி மஹவெலி ரீச் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ விவசாய அமைச்சர் திரு.மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திரு.சமிந்த கிரன்கொட, திரு. ரஞ்சித் பண்டார ஆகியோரும், கண்டி மாநகர சபையின் கௌரவ மேயர் திரு.கேசர டி. சேநாநயக்க , வத்தேகம நகர சபையின் கௌரவ தலைவர் திரு.பி.எம்.ரவீந்திர பண்டார அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின கௌரவ தலைவர் திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள் மற்றும் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள் ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்றது.
2022 புதிய வருடத்தில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் லொத்தர் விற்பனையினை அதிகரிக்கும் முகமாக புதிய திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்களாக பலசெயற்திட்டங்கள் குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்போது விற்பனை  முகவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி