அத கோடிபதி லொத்தரின் விற்பனையினை அதிகரிக்கும் வகையில் 2019 ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை செயற்படுத்தப்பட்ட விசேட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அதிக விற்பனையினை மேற்கொண்ட மாவட்ட விநியோக விற்பனை முகவர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கல் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையில் நடைபெற்றது.
குறித்த மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு பெங்கொக் சுற்றுப்பயணம் ஒன்றினை வழங்க திட்டமிடப்பட்டபாலும் உலகில் காணப்படும் தற்போதைய கொவிட் 19 நிலையின் காரணமாக அச் சுற்றுப்பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பணத்தொகையாக வழங்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை மேற்கொண்டது.
அதற்கமைய அத கோடிபதி விற்பனையின்,
• ஜுலை மாதம் அதிக விற்பனையினை மேற்கொண்ட நிஷான் என்டப்ரைசஸ் நிறுவனத்திற்கும்
• ஆகஸ்ட் மாதம் அதிக விற்பனையினை மேற்கொண் திருமதி.அசலா நாணாயக்கார அவர்களுக்கும்.
• செப்டெம்பர் மாதம் அதிக விற்பனையினை மேற்கொண்ட திரு.ஒஸ்மன் த சில்வா அவர்களுக்கும.;
பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.
அந் நிகழ்வின்போது அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...