அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக மற்றும் ஜயோதா லொத்தர்களினூடாக உருவாக்கப்பட்ட சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கு காசோலை வழங்கல் 2021.01.07ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது 'கோடிபதி கப்ருக" 652வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.87,991,625 பணத்தொகையினை வெற்றிபெற்ற அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.குமார பதிரணலாகே சுனில் அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.யூ.டி.எல்.தினேஷ் குமார் ஆவார்.
மேலும் ஜயோத 1717வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.57,138,276 பணத்தொகையினை வெற்றிபெற்ற கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த திரு.ஏ.ஜீ.பி.கொடிதுவக்கு அவர்களுக்கும் அதன்Nபுhது காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திருமதி.ரி.எம்.எஸ்.பி.மெணிகே ஆவார்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தவைர் திரு.அமித கமகே மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் அன்றாட சீட்டிலுப்புக்களில் மிகவும் கவர்ச்சியான சீட்டான சுப்பர் போல் லொத்தர் சீட்டின் விசேட சீட்டிலுப்பொன்று எதிர்வரும் 30 ஆந் திகதியன்று நடாத்துவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
சுப்பர்...
லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டின் ”சுப்பிரி தன யோகம்” விசேட சீட்டிலுப்பின் முதற் பரிசான சுப்பிரி வீகோ மோட்டார் வாகனத்தை அம்பலந்தொட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி. பி.வி. வர்ணசீலீ அவர்களால் வெற்றியீட்டிக் கொள்ளப்பட்டது. அவருக்கு இவ் வெற்...
அபிவிருத்தி லொத்தர் சபையின் “DLB யின் பராமரிப்பு” எனும் கருப்பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் எட்டாவது வைத்திய முகாம் நுவரெலியா மாவட்டத்தில...