அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

இலங்கையின் பிரமாண்டமான கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின் பவர் ப்லே விசேட சீட்டிழுப்பு செப்டெம்பர் 29ம் திகதி

01-September-2022

லொத்தர் சந்தையின் தற்போது காணப்படும் அதி பிரம்மாண்டமான சுப்பர் கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் உங்களின் கனவுகளுக்கும் மேலாக உங்களின் வெற்றியினை வைக்கும் கப்ருக லொத்தரின் விசேட சீட்டிழுப்பு வருகின்ற செப்டெம்ர் 29ம் திகதி நடைபெறவுள்ளது.

பவர் ப்லே” என பெயரிடப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2022.09.01ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.

இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரின் முன் பக்கத்தில் 05 இலக்கங்களை கொண்ட விசேட இலக்க நிரல்கள் 02 அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் 100,000 ரூபாய் பணப்பரிசுகளும், இரண்டாம் இலக்கம் பொருந்துவதன் மூலம் 10,000 ரூபாய் பரிசுகள் பலவற்றினையும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் இவ் அதிர்ஷ்டங்களுடன் வழமையான பரிசமைப்பும் மாற்றமின்றி காணப்படும். பிரம்மாண்டமான கனவுகளிடையே வலம்வர நீங்களும் அதிக அதிகமாக கப்ருக லொத்தர்களை கொள்வனவு செய்யவும்.



29-November-2024

...

சிறப்புச் செய்தி